IND vs SA: இந்தியா வரப்போகும் தென்னாப்பிரிக்கா.. பவுமா பாய்ஸ் பட்டியல் ரிலீஸ் - மிரட்டலா இருக்காங்க!
இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் ஆட உள்ள தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தொடரில் இடம்பெறாத பவுமா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதிய ஒருநாள் தொடர் முடிந்த நிலையில் தற்போது இரு அணிகளும் டி20 தொடரில் விளையாட உள்ளனர்.
தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு:
இந்த தொடர் முடிந்த பிறகு இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தெம்பா பவுமா தென்னாப்பிரிக்க அணி கீழே வருமாறு:
தெம்பா பவுமா ( கேப்டன்), கார்பின் போஸ்ச், டெவால்ட் ப்ரெவிஸ், டோனி டி ஜோர்சி, ஜுபயர் ஹம்சா, சைமன் ஹார்மர், மார்க்கோ ஜான்சென், கேசவ் மகாராஜ், எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், சேனுரான் முத்துசாமி, காகிசோ ரபாடா, ரியான் ரெக்கல்டன், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரேய்ன் ஆகியோர் உள்ளனர்.
பலமிகுந்த கேப்டன்:
கேப்டன் பவுமா, கார்பின் போஸ்ச், ப்ரெவிஸ், டோனி, ஹம்சா, முல்டர, மார்க்ரம் பேட்டிங்கிற்கு பலமாக உள்ளனர். பவுமா, ப்ரெவிஸ், மார்க்ரம், ஸ்டப்ஸிற்கு இந்திய மண்ணில் ஆடிய அனுபவம் உள்ளது. பந்துவீச்சில் ஜான்சென், ரபாடா, மகாராஜ், வெர்ரெய்ன், சேனுரான் முத்துசாமி பந்துவீச்சில் பலமாக உள்ளனர்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கான கேப்டன் தெம்பா பவுமா மீண்டும் களமிறங்கியுள்ளார். மொத்தம் 2 டெஸ்ட் போட்டிகள் நடக்கிறது. இந்த தொடர் 14ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இளம் இந்திய அணி:
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பெற்ற இந்திய அணியே பெரும்பாலும் இந்த தொடரிலும் இடம்பெறும் என்று கருதப்படுகிறது. சுப்மன்கில் இந்திய அணியை வழிநடத்த உள்ளார். பலமிகுந்த தென்னாப்பிரிக்க அணியை இந்திய அணி எப்படி எதிர்கொள்ளப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இந்த தொடரின் வெற்றி - தோல்வி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தங்கள் வசம் வைத்திருப்பதும், பாகிஸ்தான் மண்ணில் ஆடிய அனுபவமும் தென்னாப்பிரிக்க
2 டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பிறகு 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி - தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றனர். ஒருநாள் போட்டிகளில் மீண்டும் ரோகித் - கோலி திரும்புவார்கள் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய தேர்வுக்குழு முதலில் இந்திய டெஸ்ட் அணியை அறிவித்த பின்னர், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான அணியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




















