IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
IND vs SA T20 World Cup 2024 Final: கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் முதலில் டாஸ் வென்ற அணிகளே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பையில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை முதலில் தேர்வு செய்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை:
ஐசிசி டி20 உலகக் கோப்பையில் 20 அணிகள் பங்கேற்ற நிலையில், லீக் சுற்று, சூப்பர் 8 சுற்று மற்றும் அரையிறுதிப் போட்டிகள் ஆகியவற்றை தொடர்ந்து, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்திய அணி மூன்றாவது முறையாகவும், தென்னாப்ரிக்கா அணி முதல் முறையாகவும் முன்னேறியுள்ளது.
தங்களது இரண்டாவது டி20 கோப்பையை வெல்ல இந்திய அணியும், முதல் ஐசிசி கோப்பையை வெல்ல தென்னாப்ரிக்கா அணியும் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் போட்டி, இன்று தொடங்கியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் உள்ள பார்படாஸில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்யும் இந்திய அணி அதிடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
டாஸ் வென்ற அணிகளுக்கே வெற்றி:
INDIA HAVE WON THE TOSS AND THEY'VE DECIDED TO BAT FIRST IN THE T20 WORLD CUP FINAL. 🏆 pic.twitter.com/Yef5zYnz1x
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 29, 2024
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் முதலில் டாஸ் வென்ற அணிகளே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அதாவது 2010, 2012,2014,2016, 2022 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் டாஸ் வென்ற அணிகள் தான் கோப்பையை வென்றிருக்கிறது. அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிதான் முதலில் டாஸ் வென்றிருக்கிறது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங்கை செய்ய உள்ளது. இதனால் இந்தியா கண்டிப்பாக வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.