IND vs SA: இது கேப்டவுனா? இல்ல ஆப்பு டவுனா? தெ.ஆப்பிரிக்காவிற்கு ராசியே இல்லாத மைதானம் - வரலாற்றை பாருங்க!
இந்தியா - தென்னாப்பிரிக்க அணி மோதும் 2வது டெஸ்ட் போட்டி நடக்கும் கேப்டவுன் தென்னாப்பிரிக்க அணிக்கு ராசியில்லா மைதானமாக அமைந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதிய டி20, ஒருநாள் தொடர் முடிந்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட் செய்தது. பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. முகமது சிராஜின் மிரட்டல் வேகத்தில் சரிந்த தென்னாப்பிரிக்க அணி 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி எடுக்கும் 8வது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். அதுவும் கேப்டவுன் மைதானத்தில் மட்டும் தென்னாப்பிரிக்க அணி டெஸ்டில் ஒரு இன்னிங்சில் 100 ரன்களுக்கும் குறைவாக 10 முறை சுருண்டுள்ளது. இந்த நிலையில், கேப்டவுனில் தென்னாப்பிரிக்க அணி எடுத்த மோசமான ஸ்கோர்களை கீழே காணலாம்.
35 ரன்கள்:
1899ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியில் கேப்டவுனில் தென்னாப்பிரிக்க அணி 4வது இன்னிங்சில் 35 ரன்களுக்கு சுருண்டது.
43 ரன்கள்:
1889ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 3வது இன்னிங்சில் 43 ரன்களுக்கு தென்னாப்பிரிக்க அணி சுருண்டது.
47 ரன்கள்:
1899ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் 47 ரன்களுக்கு தென்னாப்பிரிக்க அணி 2வது இன்னிங்சில் சுருண்டது.
55 ரன்கள்:
இன்று இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 55 ரன்களுக்கு சுருண்டுள்ளது.
5. 72 ரன்கள்:
1957ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 4வது இன்னிங்சில் 72 ரன்களுக்கு தென்னாப்பிரிக்க அணி சுருண்டது.
83 ரன்கள்:
1892ம் ஆண்டு கேப்டவுனில் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 3வது இன்னிங்சில் 83 ரன்களுக்கு தென்னாப்பிரிக்க அணி ஆல் அவுட்டானது.
85 ரன்கள்:
1902ம் ஆணடு நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்சில் 85 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
96 ரன்கள்:
தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2011ம் ஆண்டு நடந்த போட்டியில் 2வது இன்னிங்சில் 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
97 ரன்கள்:
1892ம் ஆண்டு நடந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 97 ரன்களுக்கு சுருண்டது.
99 ரன்கள்:
1957ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 3வது இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி 99 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென்னாப்பிரிக்க அணி அதன் சொந்த மைதானமான கேப்டவுனில் மிக மோசமான செயல்பாடுகளை டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து வருவது அந்த நாட்டு ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.