IND vs PAK Live : 2 பந்துகளில் 2 ரன்கள்..! இருக்கை நுனியில் ரசிகர்கள்..!
IND vs PAK Live : இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையேயான கிரிக்கெட் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை ஏபிபி நாடு இணையதளத்தில் உடனுக்குடன் கீழே விரிவாக காணலாம்.
LIVE
Background
ஆசிய கோப்பைத் தொடரில் இன்று துபாய் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர மோதுகின்றன. ஏற்கனவே நடைபெற்ற லீக் போட்டியில் இதே மைதானத்தில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியதால் இந்திய அணி வீரர்கள் உற்சாகமாக களமிறங்கும். அதேசமயத்தில் பாகிஸ்தான் அணி வீரர்கள் லீக் போட்டியில் பெற்ற தோல்விக்கு பழிதீர்க்க முனைப்புடன் களமிறங்கும். இதனால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்பதில் சந்தேகம் இல்லை.
பாகிஸ்தான் அணியில் இந்திய அணிக்கு எதிராக களமிறங்கிய தஹானிக்கு ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியின்போது தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால், அவர் இன்றைய போட்டியில் களமிறங்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் அவர் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டியதுடன் பந்துவீச்சிலும் ஓரளவு பங்களித்தார். இதனால், அவர் ஆட முடியாதது பாகிஸ்தான் அணிக்கு இழப்பாக அமைந்துள்ளது.
இந்திய அணியிலும் மிகவும் முக்கிய வீரரான ஆல்ரவுண்டர் ஜடேஜா ஆடாததும் இந்திய அணிக்கு இழப்பாக அமைந்துள்ளது. இதனால், அவருக்கு பதிலாக இந்திய அணியில் அக்ஷர் படேல் அல்லது அஸ்வின் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பர் 4 சுற்றின் முக்கிய போட்டியான இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு செல்வது எளிதாகிவிடும் என்பதால் இரு அணி வீரர்களும் முனைப்புடன் விளை்யாடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
போட்டி நடைபெறும் துபாய் மைதானத்தில் ஏற்கனவே கிரிக்கெட் ஆடிய அனுபவம் ஹசன் அலிக்கு இருப்பதால், அவர் மீண்டும் அணியில் இடம்பெற்றால் பாகிஸ்தான் அணிக்கு பெரும் பலமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். அதேசமயத்தில், கடந்த போட்டியில் இளம் வீரர் நசீம்ஷா அசத்தியதால் அவரைப் போலவே ஹசனாயினும் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் என்பதால் அவருக்கும் வாய்ப்பு அளிப்பது குறித்து பாகிஸ்தான் அணி நிர்வாகம் பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்திய அணியில் இன்று கேப்டன் ரோகித்சர்மா, கே.எல்.ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப்பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக்பாண்ட்யா, புவனேஷ்குமார், அஸ்வின் அல்லது அக்ஷர், அர்ஷ்தீப், சாஹல் களமிறங்க வாய்ப்பு உள்ளது.
பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம், ரிஸ்வான், பகர்ஜமான், இப்திகார் அகமது, குஷ்தில்ஷா, ஷதாப்கான், ஆசிப் அலில முகமது நவாஸ், நஷீம்ஷா, ஹரீஷ் ராஃப், ஹசன் அலி களமிறங்க வாய்ப்பு உள்ளது.
2 பந்துகளில் 2 ரன்கள்..! இருக்கை நுனியில் ரசிகர்கள்..!
அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் ஆசிப் அலி ஆட்டமிழந்ததால் 2 பந்துகளில் 2 ரன்கள் தேவை என்ற சூழல் ஏற்பட்டதால் பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
10 பந்துகளில் 18 ரன்கள் தேவை..! வெல்லப்போவது யார்..?
பாகிஸ்தான் வெற்றிக்கு கடைசி 10 பந்துகளில் 18 ரன்கள் தேவைப்படுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய பந்துவீச்சாளர்களும் முழு நம்பிக்கையுடன் வீசி வருகின்றனர்.
முகமது ரிஸ்டான் 71 ரன்களில் அவுட்..!
பாகிஸ்தான் அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடி வந்த முகமது ரிஸ்வான் 51 பந்துகளில் 71 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணியினர் உற்சாகம் அடைந்தனர்.
டேஞ்சர் பேட்ஸ்மேன் முகமது நவாஸ் அவுட்..!
இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக விளங்கிய டேஞ்சர் பேட்ஸ்மேன் முகமது நவாஸ் 20 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 42 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஷ்வர்குமார் பந்தில் ஆட்டமிழந்தார்.
முகமது நவாஸ் - ரிஸ்வான் அதிரடி..! பாகிஸ்தானை கட்டுப்படுத்துமா இந்தியா..?
பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் களமிறங்கிய முகமது நவாஸ் அதிரடி ஆடி வருவதால் பாகிஸ்தான் வெற்றிக்கு 32 பந்துகளில் 50 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.