IND vs PAK: மழையால் ரிசர்வ் டே.. முழுமை பெறுமா இந்தியா- பாகிஸ்தான் போட்டி.. கொழும்பில் வானிலை எப்படி இருக்கு?
இலங்கையின் கொழும்பில் திங்கட்கிழமை (இன்று) காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆசியக் கோப்பை 2023 இன் சூப்பர் ஃபோர் போட்டியின் மூன்றாவது ஆட்டம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இன்று ரிசர்வ் நாளில் நடைபெறும். மழை காரணமாக நேற்று நடந்த இந்தப் போட்டியை முழுதாக முடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக இன்று நேற்று விட்ட போட்டி அப்படியே தொடரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கொழும்பில் நடைபெறும் இந்தப் போட்டியிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்றும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு குறைவு என்று கூறப்பட்டது.
இலங்கையின் கொழும்பில் திங்கட்கிழமை (இன்று) காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்பின், காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு குறைவு. ஆனால் அதன் பிறகு மழை பெய்யலாம். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் 3 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி நேற்று விட்ட ஸ்கோரில் இருந்து விளையாடத் தொடங்கும். ஞாயிற்றுக்கிழமை அதாவது நேற்று ஆட்டம் தொடங்கும் போது வானம் தெளிவாகவும் வெயிலாகவும் இருந்தது. ஆனால் அதன் பிறகு வானிலை மாறி பலத்த மழை பெய்தது.
ஆசியக் கோப்பை 2023 இன் சூப்பர் ஃபோர் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி மட்டுமே ரிசர்வ் நாள் வைக்கப்பட்டது. ரிசர்வ் நாளில் இந்த இரு அணிகளும் முதல்முறையாக ஒருநாள் போட்டியில் மோதுவது சுவாரஸ்யமான விஷயமாக பார்க்கப்படுகிறது. கொழும்பில் நிலவும் காலநிலையை பார்த்தால் இரவு 11.30 மணி வரை மழை பெய்யும் அபாயம் உள்ளது. இது இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு இன்னும் சிக்கலை ஏற்படுத்தும்.
ரிசர்வ் நாள் காரணமாக இந்திய அணி சிக்கலை சந்திக்கலாம். வருகின்ற செப்டம்பர் 12ஆம் தேதி (செவ்வாய்கிழமை) கொழும்பில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்காக களத்தில் இறங்கிய இந்திய அணி, இப்போது ரிசர்வ் நாளிலும் போட்டியை விளையாட இருக்கிறது. எனவே, இந்திய வீரர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் போட்டிகளில் விளையாடுவார்கள். அத்தகைய சூழ்நிலையில், வீரர்கள் சோர்வடைவார்கள். உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய வீரர்கள் காயம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும் என அச்சம் ஏற்படுகிறது.
வானிலை ஆய்வு மையம் சொன்னது என்ன..?
இன்றும் கொழும்பில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பில் மழை பொழிவதற்கு 90 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாள் முழுவதும் மணிக்கு 15 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். மழை காரணமாக இன்று ஆட்டம் நிறைவடையாவிட்டால் ஆட்டம் ரத்து செய்யப்படும். குறைந்தபட்சம் 20 ஓவர்கள் கொண்ட ஆட்டம் இன்று நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.