IND vs PAK Weather Report: இந்தியா - பாகிஸ்தான் இறுதிப்போட்டி... மழைக்கு வாய்ப்பு? பிட்ச் ரிப்போர்ட்!
IND vs PAK Weather Report: IND vs PAK Weather Report: ஆசிய கோப்பை வரலாற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் இறுதிப் போட்டி இன்று (செப்டம்பர் 28) நடைபெற உள்ளது.

IND vs PAK Weather Report: ஆசிய கோப்பை வரலாற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் இறுதிப் போட்டி இன்று (செப்டம்பர் 28) நடைபெற உள்ளது.
ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டி:
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை டி20 தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணியும் சல்மான் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோத உள்ளது. முன்னதாக மூன்று லீக் ஆட்டங்களிலும் சூப்பர் 4 சுற்றில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது அதேபோல் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் தல இரண்டு வெற்றி மற்றும் ஒரு தோல்வி என பாகிஸ்தான் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்றைய போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் பார்க்கலாம்.
பிட்ச் ரிப்போர்ட்:
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஆடுகளம் பொதுவாக மெதுவான ஒரு ஆடுகளம். இங்கு பேட்ஸ்மேன்கள் பெரிய ஸ்கேரை எட்டுவது என்பது கொஞ்சம் கடினமானது . அதே நேரம் கடந்த இந்தியா இலங்கை ஆட்டத்தின் போது 202 ரன்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டியிலும் இது போன்ற ஒரு ஆட்டம் நடக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை எப்படி இருக்கும்?
பகலில் வெப்பநிலை 38 டிகிரி ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், மைதானம் சற்றே ஈரப்பதத்துடன் இருக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
எந்த அணிக்கு பிட்ச் சாதகம்?
இரு அணிகளுமே வலுவான பந்துவீச்சை கொண்டுள்ளன. அப்ரார் அகமதுவுக்கு முன்னதாகவே வேகப்பந்து வீச்சாளர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த முடியும். மேலும், சுழற்பந்து வீச்சாளர்கள் போட்டியைக் கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சிப்பார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை, பும்ரா இன்றைய போட்டியில் பாகிஸ்தானை மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் குல்தீப் மற்றும் வருண் ஆகியோரின் சுழற்பந்தும் எடுபடும்.
இந்திய வீரர்கள்:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், அபிஷேக் சர்மா , திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் , சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் சிங்.
பாகிஸ்தான் வீரர்கள்:
சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், ஃபகார் ஜமான், ஆகா சல்மான் (கேப்டன்), முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷாஹீன் அப்ரிடி, சுஃபியான் முகீம், அப்ரார் அகமது, ஹாரிஸ் ரவுஃப்.




















