IND vs PAK Final: சூழலில் மிரட்டிய குல்தீப்... இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்! இப்படி பண்ணிட்டீங்களே பா!
IND vs PAK Asia Cup 2025 Final 1st Innings Highlights : ஆசிய கோப்பை டி20 இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

IND vs PAK Asia Cup 2025 Final 1st Innings Highlights : ஆசிய கோப்பை டி20 இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இறுதிப்போட்டி:
துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை டி20 இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த வகையில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் ஃபகார் ஜமான் ஆகியோர் களம் இறங்கினார்கள்.
இருவரும் பாகிஸ்தான் அணிக்கு அருமையான தொடக்கத்தை கொடுத்தார்கள் என்றே சொல்ல வேண்டும். சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபர்ஹான் 38 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களம் இறங்கிய சைம் அயூப்பும் 14 ரன்களில் குல்தீப் யாதவ் சூழலில் விக்கெட்டை பறிகொடுத்தார். மறுபுறம் ஃபகார் ஜமான் 46 ரன்களை சேர்த்தார்.
மிரட்டிய குல்தீப் யாதவ் சுழல்:
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் பாகிஸ்தான் அணியின் பேட்டர்களை தன் மாயஜால சுழலில் மிரட்டினார். அடுத்தடுத்து களம் இறங்கிய சல்மான் அலி, பாஹிம் அஸ்ரப் உள்ளிட்டோர் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்தவகையில் 19.1 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களில் சுருண்டது. இந்திய அணி பந்து வீச்சளர்கள் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
At his absolute best 🫡
— BCCI (@BCCI) September 28, 2025
Kuldeep Yadav with a performance for the ages 🤩
Updates ▶️ https://t.co/0VXKuKPkE2#TeamIndia | #AsiaCup2025 | #Final | @imkuldeep18 pic.twitter.com/iGjyEKfetF
வருண் சக்கரவர்த்தி, அக்ஸர் படேல், பும்ரா உள்ளிட்டோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்து பாகிஸ்தான் அணியை பந்தாடினார்கள். இச்சூழலில் தான் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது.




















