Watch Video: 5 ரூபாய்க்கு பெப்சி... ஷ்ரேயாஸ் ஐயர்ன்னா செக்ஸி... கான்பூர் மைதானத்தில் ஆர்ப்பரித்த ரசிகர்கள்!
ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது கான்பூரில் இந்திய ரசிகர்கள் 5 ரூபாய்க்கு பெப்சி, ஸ்ரேயாஸ் ஐயர்ன்னா செக்ஸி என்று கத்திய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
டி20 உலக கோப்பை பிறகு நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. இதில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி மூன்று டி20 போட்டிகளையும் வென்று டி20 தொடரை கைப்பற்றியது. அதனை அடுத்து, இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரஹானே, பேட்டிங் தேர்வு செய்தார். போட்டி நடைபெறுவதற்கு முன்பே, முதல் டெஸ்ட் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் அறிமுகமாக இருப்பதாக இந்திய டெஸ்ட் அணியின் தற்காலிக கேப்டன் ரஹானே தெரிவித்திருந்தார். அதன்படி, இந்திய அணியில் அறிமுகமாகும் 303 வது வீரர் என்ற பெருமையை ஷ்ரேயாஸ் ஐயர் பெற்றார்.
ஓப்பனிங் களமிறங்கிய மயாங்க் பெரிதாக சோபிக்கவில்லை. சிறப்பாக ஆடிய மற்றொரு ஓப்பனரான கில், அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவரை அடுத்து பேட்டிங் செய்த புஜாரா, ரஹானா ஆகியோரும் ஏமாற்றம் அளித்த நிலையில் அறிமுக போட்டியில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதம் கடந்து அடித்து கொண்டிருக்கிறார். இவர் 136 பந்துகளில் 75 ரன்கள் ஸ்ரேயாஸ் ஐயர் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இவரின் திறமைக்கு கிரிக்கெட் வட்டாரத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றது.
5₹ Ki Pepsi
— SHAKIL AHMED (@Im_Being_Shakil) November 25, 2021
Iyer Bhai Saxxy @ShreyasIyer15 pic.twitter.com/HuYPEhiNIm
இந்தநிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது கான்பூரில் இந்திய ரசிகர்கள் 5 ரூபாய்க்கு பெப்சி, ஸ்ரேயாஸ் ஐயர்ன்னா செக்ஸி என்று கத்திய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைக்கேட்ட பலரும் மைதானத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது தொடர்ந்து ட்ரெண்டாகி வருகிறது.
முதல் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் குவித்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் 136 பந்துகளில் 75 ரன்களுடனும், ஜடேஜா 100 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்