IND vs NAM, T20 LIVE: ரோஹித், ராகுல் அரை சதம்! 15.2 ஓவர்களில் வெற்றியை தொட்ட இந்திய அணி
இந்திய அணியை இந்த தொடரில் இருந்து வெளியேற்றிய இரு ஆட்டங்கள் நடைபெற்ற அதே துபாய் மைதானத்தில்தான் இன்றைய ஆட்டம் நடைபெற உள்ளது.
LIVE
Background
அபுதாபியில் நடைபெற்ற நியூசிலாந்து வென்றதன் மூலம் உலககோப்பை டி20 ஆட்டம் அடுத்தகட்டத்திற்கு சென்றுள்ளது. நேற்றைய வெற்றி மூலம் நியூசிலாந்து நான்காவது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது. இதனால், உலககோப்பையில் ரன்ரேட் மூலம் அரையிறுதிக்குள் நுழையலாம் என்று இந்திய அணி போட்ட கணக்கு தப்பாகிவிட்டது.
இந்த நிலையில், சம்பிரதாயத்திற்காக ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த இந்தியா- நமீபியா ஆட்டம் குரூப் 2 பிரிவில் இன்று நடைபெற உள்ளது. இந்திய அணியை இந்த தொடரில் இருந்து வெளியேற்றிய இரு ஆட்டங்கள் நடைபெற்ற அதே துபாய் மைதானத்தில்தான் இன்றைய ஆட்டம் நடைபெற உள்ளது.
இந்திய கேப்டன் விராட்கோலி இந்த தொடருக்கு முன்னதாக, டி20 உலககோப்பையுடன் டி20 ஆட்டங்களில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனால், டி20 ஆட்டங்களில் கேப்டனாக கோலி இன்று தனது கடைசி போட்டியில் களமிறங்க உள்ளார். இந்திய ரசிகர்கள் விராட்கோலிக்கு உணர்ச்சிப்பூர்வமான முறையில் வாழ்த்துக்ளை சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர். இதனால், கோலியை வெற்றியுடன் கேப்டன்சியில் இருந்து விடைபெறச் செய்ய வேண்டும் என்று இந்திய வீரர்களும் விரும்புவார்கள் என்று எதிர்பார்க்ப்படுகிறது.