IND vs ENG: இரண்டாவது ஒருநாள் போட்டிக்கும் கோலி விளையாடுவது சந்தேகம்... தொடரை வெல்லுமா இந்தியா?
இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய இந்திய அணி 110 ரன்களுக்கு சுருட்டியது. பும்ரா சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அதன்பின்னர் ஆடிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் காயம் காரணமாக விலகிய விராட் கோலி இன்றைய போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது. முதல் போட்டியில் வெற்றி அடைந்த இந்திய அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
A clinical performance from #TeamIndia to beat England by 10 wickets 👏👏
— BCCI (@BCCI) July 12, 2022
We go 1️⃣-0️⃣ up in the series 👌
Scorecard ▶️ https://t.co/8E3nGmlNOh #ENGvIND pic.twitter.com/zpdix7PmTf
லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா:
புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டை ஆகி உள்ளது. ஆகவே இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மாவின் ஃபார்ம் சிறப்பான ஒன்றாக அமைந்துள்ளது. அவருடன் ஷிகர் தவானும் இன்றைய போட்டியில் கைக் கொடுக்கும் பட்சத்தில் இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
பிரச்னையில் இங்கிலாந்து:
இங்கிலாந்து அணி ஏற்கெனவே சொந்த மண்ணில் டி20 தொடரை இழந்துள்ளது. இந்தச் சூழலில் இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தால் ஒருநாள் தொடரையும் இங்கிலாந்து அணி இழக்க நேரீடும். ஆகவே இங்கிலாந்து அணி கடும் நெருக்கடியில் உள்ளது. இங்கிலாந்து அணியின் அனுபவ வீரர்கள் ரூட், ஸ்டோக்ஸ், பட்லர், பேர்ஸ்டோவ் ஆகியோர் பொறுப்புடன் ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்