IND vs ENG 3rd ODI: முதுகுப்பிடிப்பால் களமிறங்காத பும்ரா...! இங்கிலாந்தை அச்சுறுத்துவாரா சிராஜ்...?
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதுகில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் பும்ரா களமிறங்கவில்லை.
![IND vs ENG 3rd ODI: முதுகுப்பிடிப்பால் களமிறங்காத பும்ரா...! இங்கிலாந்தை அச்சுறுத்துவாரா சிராஜ்...? IND vs ENG 3rd ODI Jasprit Bumrah Ruled Out India vs England 3rd ODI Owing to back spasms Mohammed Siraj Replaces IND vs ENG 3rd ODI: முதுகுப்பிடிப்பால் களமிறங்காத பும்ரா...! இங்கிலாந்தை அச்சுறுத்துவாரா சிராஜ்...?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/17/9b9a59a611c2b68efd2d8c71dea23d3c1658056179_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்து ஆடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரராஜ பும்ரா இடம்பெறவில்லை,
A look at our Playing XI for the game.
— BCCI (@BCCI) July 17, 2022
Live - https://t.co/radUqNrOn1 #ENGvIND pic.twitter.com/TkbzNYfLrw
முதுகில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக பும்ரா இந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் களமிறங்கியுள்ளார். மற்றபடி இந்திய அணியின் ஆடும் லெவனில் மாற்றம் ஏதுமில்லை. பும்ரா களமிறங்காதது இந்திய அணிக்கு பலத்த பின்னடைவாக அமைந்துள்ளது. அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்க வீரர்களாக ரோகித்சர்மா – ஷிகர்தவான் களமிறங்க உள்ளனர். ஒன் டவுனில் விராட்கோலி களமிறங்க உள்ளார், இன்றைய போட்டியில் விராட்கோலி மீண்டும் பார்முக்கு திரும்புவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். சூர்யகுமார் யாதவ், ரிஷப்பண்ட் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா இடம்பிடித்துள்ளனர். சாஹல் மற்றும் பிரசித்கிருஷ்ணா ஆகியோரும் களமிறங்கியுள்ளனர்.
Hardik Pandya gets the big wicket of Jason Roy 👌👌
— BCCI (@BCCI) July 17, 2022
Live - https://t.co/radUqNrOn1 #ENGvIND pic.twitter.com/RkHCFsAZsG
இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த போட்டியில் களமிறங்கிய அதே அணிதான் இந்த போட்டியிலும் களமிறங்கியுள்ளது. சற்று முன் வரை அந்த அணி 12.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 71 ரன்களுடன் ஆடி வருகிறது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் அதிரடியாக ஆடினார்.
மற்ற அதிரடி வீரரான ஜானி பார்ஸ்டோவும், ஜோ ரூட்டும் ரன் ஏதுமின்றி 0 ரன்களில் முகமது சிராஜ் பந்தில் அவுட்டாகினார். அதிரடி காட்டிய ஜேசன் ராய் 31 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 41 ரன்கள் விளாசிய நிலையில் ஹர்திக் பாண்ட்யா பந்தில் அவுட்டானார். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை வெல்லும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)