IND vs ENG 2nd ODI: சாஹல் சுழலில் சிக்கிய இங்கிலாந்து..! கடின இலக்கை நிர்ணயிக்குமா..?
யுஸ்வேந்திர சாஹல் சுழலில் சிக்கி இங்கிலாந்து அணி 125 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியும், இந்திய அணியும் நேருக்கு நேர் மோதி வருகின்றனர். இந்த போட்டியிலும் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித்சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்,
கடந்த போட்டியைப்போல சொதப்பிவிடக்கூடாது என்பதற்காக இங்கிலாந்து வீரர்கள் நிதானமாக ஆடினர். தொடர்ந்து சொதப்பலாக ஆடி வரும் ஜேசன் ராய் மிகவும் நிதானமாக ஆடினர். இருப்பினும் அவர் 33 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 33 ரன்கள் எடுத்திருந்தபோது ஹர்திக் பாண்ட்யா பந்தில் அவுட்டானார்.
அடுத்து பார்ஸ்டோவுடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடி வந்த ஜானி பார்ஸ்டோ சாஹல் சுழலில் சிக்கி ஸ்டம்பை பறிகொடுத்தார். யுஸ்வேந்திர சாஹல் பந்துவீச வந்த பிறகு இங்கிலாந்து தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அவரது சுழலில் சிறிது நேரத்திலே ஜோ ரூட் 11 ரன்களில் எல்.பி.டபுள்யூ ஆனார். பின்னர், கேப்டன் பல்டருடன் அதிரடி ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார்.
Jonny Bairstow ☑️
— BCCI (@BCCI) July 14, 2022
Joe Root ☑️
Ben Stokes ☑️@yuzi_chahal is on 🔥🔥
Live - https://t.co/N4iVtxsQDF #ENGvIND pic.twitter.com/4nGMAASmPM
இந்த ஜோடி களத்தில் நிலைத்து நிற்கும் முன்பே இந்த ஜோடியை முகமது ஷமி காலி செய்தார். அவரது வேகத்தில் கேப்டன் பட்லர் 4 ரன்களில் ஸ்டம்பை பறிகொடுத்தார். முதல் 50 ரன்களுக்கு 1 விக்கெட்டை மட்டுமே இழந்த இங்கிலாந்து அடுத்த 50 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அணியின் ஸ்கோர் 102 ஆக உயர்ந்தபோது பென் ஸ்டோக்ஸ் சாஹல் சுழலில் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார்.
சற்றுமுன் வரை அந்த அணி 25 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. லியாம் லிவிங்ஸ்டன் 16 ரன்களுடனும், மொயின் அலி 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய வீரர்கள் தொடர்ந்து கட்டுக்கோப்பாக பந்துவீசி வருவதால் இங்கிலாந்து வீரர்கள் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்