IND vs BAN 2nd ODI Score Live: தொடரை வென்றது வங்கதேசம்.. கடைசி பந்தில் 6 ரன் எடுக்க முடியாமல் இந்தியா தோல்வி
IND vs BAN 2nd ODI Score Live: இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
LIVE
Background
IND vs BAN 2nd ODI Score Live:
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி தாக்காவில் உள்ள ஷேர் இ பங்களா மைதானத்தில் இன்று (டிச.07) காலை 11.30 மணிக்குத் தொடங்கியது.
இந்திய அணி வங்கதேசத்துக்கு பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்து வங்க தேச அணியிடம் பரிதாபமாகத் தோல்வியுற்றது.
தொடரை தக்க வைக்குமா இந்தியா?
மேலும், முதல் ஒருநாள் போட்டியில் ஸ்லோ ஓவர் ரேட்டை உபயோகித்ததாக இந்திய அணிக்கு போட்டிக் கட்டணத்தில் 80 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவும் இந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டு முன்மொழியப்பட்ட அனுமதியை ஏற்றுக்கொண்டார். எனவே முறையான விசாரணை தேவையில்லை என ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முதல் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வங்க தேச அணி தொடரைக் கைப்பற்றும் உறுதியுடன் இன்று களமிறங்கும் நிலையில், அதேபோல், இன்றைய போட்டியில் வென்று இந்தியா தொடரைத் தக்க வைக்குமா என ரசிகர்களுக்கு எதிர்ப்பார்த்து காத்துள்ளனர்.
ஷேர் இ பங்களா மைதானத்தில் மைதானத்தில் 22 போட்டிகளில் விளையாடி உள்ள இந்திய அணி 14 போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியையும் தழுவியுள்ளது. மழை காரணமாக ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர் தோல்விக்கு பிறகு, இந்திய அணி அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை வெல்லும் முனைப்பில் உள்ளது. இதற்காக டி20 உலகக் கோப்பை பின் நியூசிலாந்து சென்ற இந்திய அணி டி20 தொடரை வென்ற கையோடு, ஒருநாள் தொடரை இழந்தது.
அந்த தொடரில் டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவானும் தலைமை தாங்கினர்.
மற்ற தொடர்கள், மற்ற நாடுகள் சுற்றுபயணம் மேற்கொள்ளும்போது வங்கதேச அணி தடுமாறினாலும், தனது சொந்த மண்ணில் எதிரணிகளை புலியாக புரட்டி எடுத்து வருகிறது. கடைசியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு டி20 தொடரை வென்றது. அதேபோல், கடந்த 2015ம் ஆண்டு சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் வென்றது. அதேபோல், 2007 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி, வங்கதேசத்திற்கு தோல்வியடைந்தது இன்றளவும் யாராலும் மறக்க முடியாதது.
கணிக்கப்பட்ட இந்திய அணி:
1. ரோகித் ஷர்மா (கேப்டன்), 2. ஷிகர் தவான், 3. விராட் கோலி, 4. ஷ்ரேயாஸ் ஐயர், 5. கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), 6. உம்ரான் மாலிக், 7. வாஷிங்டன் சுந்தர், 8. அக்சர் படேல், 9. ஷர்துல் தாக்கூர், 10. தீபக் சாஹர், 11. முகமது சிராஜ்
கணிக்கப்பட்ட வங்கதேச அணி:
1. லிட்டன் தாஸ் (கேப்டன்), 2. அனாமுல் ஹக், 3. ஷாகிப் அல் ஹசன், 4. முஷ்பிகுர் ரஹீம் (வாரம்), 5. மஹ்முதுல்லா, 6. அபிஃப் ஹொசைன், 7. யாசிர் அலி, 8. மெஹிதி ஹசன் மிராஸ், 9. ஹசன் மஹ்மூத், 10. முஸ்தபிஸுர் ரஹ்மான், 11. எஹோபாஸ் ஹின்து
ரோகித்தின் அரை சதம் வீண்
கேப்டன் ரோகித் சர்மா காயத்துடன் களமிறங்கி கடைசி கட்டத்தில் விளையாடினார். 28 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தும் கடைசி ஒரு பாலில் 6 ரன் தேவைப்பட்ட நிலையில், அடிக்க முடியாமல் போனது.
நம்பிக்கை வீரராக ரோகித்
கேப்டன் ரோகித் சர்மா இறுதி கட்டத்தில் இறங்கி விளையாடி வருகிறார். இந்தியா வெற்றி பெறும் முனைப்புடன் விளையாடி வருகிறது.
தீபக் சஹர் விக்கெட்டும் பறிபோனது
பந்துவீச்சாளரானா தீபக் சஹரின் விக்கெட்டும் பறிபோனது. இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. களத்தில் கேப்டன் ரோகித் சர்மா இறங்கி விளையாடி வருகிறார்.
7 ஆவது விக்கெட்டும் பறிபோனது
42.4ஆவது ஓவிரல் ஷர்துல் தாக்குர் ஆட்டமிழந்தார். இந்திய அணி 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 209 ரன்களை எடுத்துள்ளது. 41 பந்துகளில் 63 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
41 ஓவர்கள் முடிவில்..
41 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து இந்தியா 195 ரன்களை குவித்துள்ளது.