Ashwin WTC Final: ”எனக்கு வருத்தம் பா”... இறுதிப் போட்டியில் அஸ்வின் இல்லாதது குறித்து குமுறியவர் யார் தெரியுமா?
Ashwin WTC Final: உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அஸ்வினை ப்ளேயிங் லெவனில் சேர்க்காதது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்தினை தெரிவித்துள்ளனர்.
Ashwin WTC Final: உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அஸ்வினை ப்ளேயிங் லெவனில் சேர்க்காதது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்தினை தெரிவித்துள்ளனர்.
அஸ்வினை இந்திய அணி ப்ளேயிங் லெவனில் சேர்க்காதது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஜன், உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியில் அஸ்வின் இல்லாதது பெரிய தவறு என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோல், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி ஆட்டக்காரருமான சவுரவ் கங்குலி ஸ்டார் போர்ட்ஸ் சேனலுக்கு கொடுத்த நேர்காணலில், ரோகித் போலத்தான் நானும் யோசிக்கிறேன். ஆனால், அஸ்வின் போன்ற உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சாளரை அணியில் இருந்து தவிர்ப்பது மிகவும் கடினம். மேலும் கடந்த இரண்டு வருடங்களில் இந்திய அணி 4 வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டு விளையாடி வெற்றி பெற்றுள்ளது என கூறினார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஒரு தனியார் தொலைகாட்சிக்கு கொடுத்த பேட்டியில், ஆஸ்திரேலியா மாதிரியான அணிக்கு எதிராக ஆடும் போது அஸ்வின் அணியில் இருந்திருக்க வேண்டும். மேலும், 4 வேகப்பந்து வீச்சாளார்களைக் கொண்டுள்ள இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. புதிய பந்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்த திட்டத்துடன் களமிறங்கியது என கூறியுள்ளார்.
டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்த பின்னர் ப்ளேயிங் லெவன் குறித்து கூறிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, வானிலை மேகமூட்டத்துடன் இருப்பதால், நாங்கள் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கவுள்ளோம் என்றார். மேலும், பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் சுழற்பந்து வீசுவதுடன் சிறப்பாக பேட்டிங் செய்யும் ஜடேஜாவை அணியில் தேர்வு செய்வது மிகவும் சரியான முடிவாக இருக்கும் என கூறினார்.
No @ashwinravi99 for #India is a big mistake .. !! #WTC2023
— Michael Vaughan (@MichaelVaughan) June 7, 2023
ரோகித் சர்மாவின் இந்த முடிவு குறித்து பலரும் தங்களது கருத்தினை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் ஆஸ்வினுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி மிகவும் சிரமப்பட்டுள்ளது. ஆனால் மிகவும் முக்கியமான போட்டியில் இந்திய அணி அஸ்வினை ப்ளேயிங் லெவனில் இல்லாதது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஸ்வினைப் பொறுத்தவரையில், 2021 - 2023ஆம் ஆண்டுக்கான உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 61 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். மேலும் இவரது ஆவரேஜ் 19.67ஆக உள்ளது. மேலும், இரண்டு முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.