IND Vs AUS, Innings Highlights: ஸ்ரேயஸ் ஐயர் அரைசதத்தால் தப்பிய இந்தியா; ஆஸ்திரேலியாவுக்கு 161 ரன்கள் இலக்கு
அணியில் இருந்த ஒரே சீனியர் வீரரான ஸ்ரேயஸ் ஐயர் மட்டும் பொறுப்புடன் ஆடினார். இவருக்கு ஜிதேஷ் சர்மா மற்றும் அக்சர் பட்டேல் ஓரளவிற்கு ஒத்துழைத்தனர்.
உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணி அதன் பின்னர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. இந்த தொடரில் ஏற்கனவே முடிந்த 4 போட்டிகளில் இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணி தொடரை வென்றுவிட்டது.
இந்நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5வது டி20 போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்தது. களமிறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆஸ்திரேலியா அணி அதிரடியாக பந்து வீசியதால், இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அதிரடி வீரர்கள் எல்லாம் சொதப்ப, அணியில் இருந்த ஒரே சீனியர் வீரரான ஸ்ரேயஸ் ஐயர் மட்டும் பொறுப்புடன் ஆடினார். இவருக்கு ஜிதேஷ் சர்மா மற்றும் அக்சர் பட்டேல் ஓரளவிற்கு ஒத்துழைத்தனர். ஸ்ரேயஸ் ஐயர் பொறுப்பாக அரைசதம் விளாசினார். இதனால் இந்திய அணி ஓரளவிற்கு நல்ல ஸ்கோரை எட்டியது. அவர் 37 பந்தில் 53 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இறுதியில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் சேர்த்தது.