மேலும் அறிய

IND vs AUS 3rd T20: அசத்திய அக்‌ஷர்.. கடைசி கட்டத்தில் சொதப்பிய இந்தியா..ஆஸி 186 ரன்கள் குவிப்பு..

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அக்‌ஷர் பட்டேல் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வென்றுள்ளன. இந்தத் தொடரின் கடைசி டி20 போட்டி இன்று ஹைதரபாத்தில் நடைபெறுகிறது.இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இந்தப் போட்டியில் அதிக விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர் கேம்ரூன் க்ரீன் அதிரடி காட்டினார். இவர் முதல் ஓவர் முதல் சிக்சர் பவுண்டரி விளாச தொடங்கினார். அத்துடன் 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். மறுமுனையில் கேப்டன் ஃபின்ச் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். கேம்ரூன் க்ரீன் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்காரணமாக 5 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்திருந்தது.

அதைத் தொடர்ந்து வந்த மேக்ஸ்வேல் 6 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 9 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார். இதனால் அதிரடியாக உயர்ந்து வந்த ஆஸ்திரேலிய அணியின் ரன் விகிதம் சற்று குறைந்தது. 10 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்திருந்தது. 13வது ஓவரை வீசிய ஹர்ஷல் பட்டேல் 12 ரன்கள் விட்டு கொடுத்தார். அதையடுத்து ஆட்டத்தின் 14வது ஓவரை வீசிய அக்‌ஷர் பட்டேல் ஒரே ஓவரில் இங்லீஷ் மற்றும் மேத்யூ வேட் ஆகிய இருவரின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். 

ஒரு கட்டத்தில் 200 ரன்களை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி 15 ஓவர்களுக்கு 6 விக்கெட் இழந்து 123 ரன்கள் சேர்த்து இருந்தது. ஆட்டத்தின் டெர்த் ஓவர்களில் இந்திய அணி சிறப்பாக பந்துவீசிய தவறியது. குறிப்பாக 18 மற்றும் 19 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி மொத்தமாக 39 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய டிம் டேவிட் 25 பந்துகளில்  அரைசதம் விளாசினார். அவர் 54 ரன்கள் எடுத்திருந்த போது ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில்  ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. 187 ரன்கள் எடுத்தால் இந்திய அணி போட்டியை வெல்வது மட்டுமல்லாமல் 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றிவிடும். இந்திய அணி தொடரை வெல்லுமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.

மேலும் படிக்க: சர்ச்சையை கிளப்பிய மேக்ஸ்வேல் ரன் அவுட் செல்லுமா..?- ஐசிசியின் விதி கூறுவது என்ன?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Arshdeep Singh: மிட்செலிடம் அத்துமீறிய அர்ஷ்தீப்.. மன்னிப்பு கேட்டும் செஞ்சுவிட்ட ஐசிசி! முழு விவரம்
Arshdeep Singh: மிட்செலிடம் அத்துமீறிய அர்ஷ்தீப்.. மன்னிப்பு கேட்டும் செஞ்சுவிட்ட ஐசிசி! முழு விவரம்
T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கு பிசிசிஐ-யின் பிரம்மாண்ட பரிசு! எவ்வளவு தெரியுமா?
T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கு பிசிசிஐ-யின் பிரம்மாண்ட பரிசு! எவ்வளவு தெரியுமா?
Sanju Samson:
Sanju Samson: "இது ஒரு கனவு!" வலிகளே எனது பலம்.. உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் சஞ்சு சாம்சன் உருக்கம்
பும்ரா மட்டும் போதுமா? பந்துவீச்சில் பலம்பெறுமா இந்தியா?
பும்ரா மட்டும் போதுமா? பந்துவீச்சில் பலம்பெறுமா இந்தியா?
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget