IND vs AUS 2nd T20: இரண்டாவது டி20 போட்டி நடக்குமா? வழிவிடுவாரா வருணபகவான்..? மீண்டு வருமா இந்தியா..?
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நாக்பூரில் நடைபெற உள்ளது.
இந்திய-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நாக்பூரில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் நாக்பூர் மைதானத்தில் இன்று மழை பெய்யும் சூழல் அதிகமாக உள்ளது. இதன்காரணமாக போட்டி தாமதமாக தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இன்றைய போட்டியில் காயத்திலிருந்து முழுமையாக மீண்டு வந்த பும்ரா இந்திய அணியில் இடம்பெறுவார் என்று கருதப்படுகிறது. உமேஷ் யாதவிற்கு பதிலாக அவர் அணியில் இடம்பெறுவார்.
இன்றைய போட்டியில், இந்திய அணியில் ரிஷப் பண்ட் இடம்பிடிப்பாரா? என்று ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனினும் கடந்த போட்டியில் இந்திய அணி பந்துவீச்சில் தான் சொதப்பியது. ஆகவே பந்துவீச்சில் சில மாற்றங்கள் இருக்கும் என்று கருதப்படுகிறது. பேட்டிங்கை பொறுத்தவரை எந்தவித மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Excitement levels 🆙
— BCCI (@BCCI) September 19, 2022
A cracking series awaits 💥#TeamIndia | #INDvAUS pic.twitter.com/QFb9xCxn28
இன்றைய போட்டியில் இந்திய அணி டெர்த் ஓவர்களில் சொதப்பாமல் பந்துவீசும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். குறிப்பாக அனுபவ பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் கடைசியாக விளையாடிய 3 டி20 போட்டிகளிலும் டெர்த் ஓவரில் அதிகமான ரன்களை கொடுத்து வந்தார். அவர் இன்று அந்த தவறு திருத்தி கொண்டால் இந்திய அணிக்கு அது கூடுதல் பலமாக அமையும். காயத்திற்கு பிறகு பும்ரா இந்திய அணியில் இடம்பெறுவதால் இந்திய பந்துவீச்சு பலம் அடையும் என்று தெரிகிறது.
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை அந்த அணியில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று கருதப்படுகிறது. முதல் போட்டியில் அந்த அணியின் பந்துவீச்சில் அனுபவ வீரர் கம்மின்ஸ் ரன்களை வாரி வழங்கினார். ஆகவே அந்த அணி பந்துவீச்சில் மட்டும் அதிக கவனம் செலுத்தும் என்று கருதப்படுகிறது.
இந்தியா அணி விவரம்:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல் , புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா
ஆஸ்திரேலியா அணி விவரம்:
ஆரோன் பின்ச் (கேப்டன்), சீன் அபோட், ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ் (துணை கேப்டன்), டிம் டேவிட், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட், ஆடம் ஜம்பா
மேலும் படிக்க: டி20 உலகக்கோப்பை லிஸ்ட்டில் இல்லாத வீரரை எதுக்கு எடுத்தீங்க... விளக்கம் கேட்கும் சுனில் கவாஸ்கர்...