IND vs AUS 1st T20 LIVE: ரிங்கு சிங் அதிரடி - ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இமாலய இலக்கை எட்டி இந்தியா அபார வெற்றி
IND vs AUS 1st T20 LIVE Score: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி-20 போட்டியின், லைவ் அப்டேட்டுகளை உடனடியாக தெரிந்துகொள்ள ஏபிபி நாடு இணையதள பக்கத்துடன் இணைந்திருங்கள்.
LIVE
Background
உலகக் கோப்பை 2023ன் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தற்போது இந்த தோல்வியை மறந்துவிட்டு, இந்திய அணி இப்போது தனது அடுத்த பயணத்தை தொடங்கியுள்ளது.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த முதல் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
உலகக் கோப்பை போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்டியாக விலகிய நிலையில், இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். அதே சமயம் இந்த அணியின் துணை கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த அணியில் ருதுராஜுடன் தொடக்க ஆட்டக்காரர்களான இஷான் கிஷன் அல்லது யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். இதை தொடர்ந்து, மிடில் ஆர்டரில் திலக் வர்மா, ரிங்கு சிங், அக்சர் படேல், சிவம் துபே மற்றும் வாஷிங்டன் சுந்தர் களமிறங்குவர், சுழற்பந்து வீச்சில் ரவி பிஷ்னோய்க்கும், வேகப்பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார் ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்களில் இருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
மழைக்கு வாய்ப்பா..?
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது . இதன் முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் (இன்று) வியாழக்கிழமை நடைபெறுகிறது. போட்டியின் போது மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விசாகப்பட்டினத்தில் இன்று மழை பெய்ய 60 சதவீதம் வாய்ப்பு உள்ளது. காலை முதல் வானத்தில் லேசான மேகங்கள் இருக்கும் என்றும், அதன் பிறகு லேசான மழை பெய்யக்கூடும். மழை காரணமாக ஆட்டம் முழுவதும் பாதிக்கப்படலாம். டாஸ் போடுவதற்கு சற்று முன் மழை பெய்தால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம்.
இந்த போட்டிக்கான மைதானத்தை ஆய்வு செய்ய இரு நடுவர்களும் மாலை 5.30 மணிக்கு வருவார்கள். போட்டிக்கு மழையோ அல்லது வேறு ஏதேனும் தடையோ இல்லை என்றால், போட்டி திட்டமிட்ட நேரத்தில் தொடங்கப்படும். ஆனால் மழை பெய்தால் போட்டியை எப்போது தொடங்குவது என்பதை நடுவர் முடிவு செய்து இரு அணி கேப்டன்களுக்கும் தெரிவிப்பார். போட்டியை திட்டமிட்ட நேரத்தில் தொடங்க முடிவு செய்தால், போட்டியின் டாஸ் மாலை 6.30 மணிக்கு இருக்கும்.
இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடருக்கான இரு அணி விவரம்:
இந்திய அணி: இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சிவம் துபே, ரின்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார், வாஷிங்டன் சுந்தர், அவேஷ் கான், ருதுராஜ் கெய்க்வாட், ஜிதேஷ் சர்மா
ஆஸ்திரேலிய அணி: டிராவிஸ் ஹெட், மேத்யூ ஷார்ட், ஸ்டீவன் ஸ்மித், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்/கேப்டன்), சீன் அபோட், ஆடம் ஜம்பா, நாதன் எல்லிஸ், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், தன்வீர் சங்கா, கேனி, ஆரோன் ஹார்டி
அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள்..
கடைசி ஓவரில் அக்சர் படேல், ரவி பிஷ்னோய் மற்றும் அர்ஷ்தீப் ஆகியோர் அடுத்தடுது ஆட்டமிழந்தனர்.
7 ரன்க்ள் தேவை
இந்திய அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை
14 ரன்கள் தேவை..
இந்திய அணி வெற்றி பெற கடைசி 2 ஓவர்களில் 14 ரன்கள் தேவை.
முடிந்த சூர்யா ஆட்டம்..
அதிரடியாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் 80 ரன்களில் ஆட்டமிழந்தார்.
முடிந்த சூர்யா ஆட்டம்..
அதிரடியாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் 80 ரன்களில் ஆட்டமிழந்தார்.