(Source: ECI/ABP News/ABP Majha)
ICC T20 vs IPL: காசு..பணம்..! துட்டு..மணி..! உலககோப்பையை ஓரம் கட்டும் ஐ.பி.எல் பரிசுத்தொகை..!
டி20 உலக கோப்பைக்கான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் தொகை ஐ.பி.எல்.ஐ வெல்லின் அணிக்கு வழங்கப்படும் பரிசுத்தொகையைவிட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 உலக கோப்பைக்கான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் தொகை ஐ.பி.எல்.ஐ வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத்தொகையைவிட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஐசிசி டி20 உலககோப்பை இன்னும் பதினைந்து தினங்களில் தொடங்கவிருக்கிறது.
அதாவது, அக்டோபர் மாதம் 16ம் தேதி டி20 உலககோப்பை ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது. மொத்தம் 16 அணிகள் இந்தமுறை உலககோப்பைத் தொடரில் போட்டியிடுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்களது உலககோப்பை போட்டித் தொடரில் பங்கேற்கும் அணிகளை அறிவித்து விட்டன. உலககோப்பை தொடரில் பங்கேற்கவிருக்கும் வீரர்களுக்கு காயம் ஏற்படும் வீரர்களுக்கு மட்டும் மாற்று வீரர்களை அந்தந்த அணி நிர்வாகம் அறிவித்தும் வருகிறது.
இந்நிலையில் நேற்று ஐ.சி.சி. டி20 உலககோப்பையை வெல்லும் அணிக்கு, கோப்பையுடன் வழங்கப்படும் பரிசுத் தொகையினையும் அறிவித்துள்ளது. அதில், உலககோப்பையை வெல்லும் அணிக்கு 16 லட்சம் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்பட உள்ளது. இரண்டாவது பரிசு வெல்லும் அணிக்கு 8 லட்சம் டாலர் பரிசாக வழங்கப்பட உள்ளது.
இந்திய மதிப்பில் உலககோப்பையை வெல்லும் அணிக்கு ரூபாய் 13 கோடி பரிசாக வழங்கப்பட உள்ளது. இரண்டாவது பரிசு வெல்லும் அணிக்கு 8 லட்சம் டாலர் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் 6 கோடி பரிசாக வழங்கப்பட உள்ளது. அரையிறுதியில் தோற்கும் அணிகளுக்கு 8 லட்சம் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு அணிக்கும் தலா 4 லட்சம் அமெரிக்க டாலர் வழங்கப்பட உள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் ஒவ்வொரு அணிக்கும் தலா 3 கோடி வழங்கப்பட உள்ளது.
சூப்பர் 12 சுற்றில் வெற்றி பெறும் அணிகளுக்கு மொத்தமாக 12 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு அணிக்கும் தலா 40 ஆயிரம் டாலர் வழங்கப்பட உள்ளது. சூப்பர் 12 சுற்றில் இருந்து வெளியேறும் 8 அணிகளுக்கு 5 லட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு அணிக்கும் தலா 70 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்கப்பட உள்ளது. 8 அணிகள் இந்த பரிசை பெற உள்ளன.
இந்த நிலையில், டி20 உலககோப்பைக்கான பரிசுத்தொகையை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. உலககோப்பையை வெல்லும் அணிக்கு டாலர் மதிப்பில் 16 லட்சம் டாலர் பரிசாக வழங்கப்பட உள்ளது. முதல் சுற்றில் வெற்றி பெறும் 12 அணிகளுக்கு தலா 40 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்கப்பட உள்ளது. முதல் சுற்றிலே வெளியேறும் 4 அணிகளுக்கு தலா 40 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்கப்பட உள்ளது. ஐ.சி.சி. நடத்தும் இந்த டி20 உலககோப்பை போட்டியில் பங்குபெறும் அணிகளுக்கான மொத்த பரிசுத்தொகையாக 56 லட்சம் அமெரிக்க டாலர் வழங்கப்பட உள்ளது.
டி20 உலககோப்பை vs ஐபிஎல்
ஐசிசி அறிவித்துள்ள இந்த பரிசுத் தொகை என்பது இந்தியாவில் பி.சி.சி.ஐ.ஆல் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஐபிஎல் டி20 போட்டித்தொடரில், கோப்பையை வெல்லும் அணிக்கு, ஐபிஎல் கோப்பையும் இந்திய மதிப்பில் 20 கோடி ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு இந்திய மதிப்பில் 13 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் உலகமே பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கும் பெரும் பொருட் செலவில் நடத்தப்படும் ஐசிசி டி20 உலககோப்பையை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை என்பது, ஐபிஎல் போட்டித் தொடரில் இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையும் சமமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டித் தொடரில் அதிக பரிசுத்தொகை வழங்கும் ஒரே போட்டித் தொடர் இந்தியாவில் பி.சி.சி.ஐ.ஆல் நடத்தப்படும் ஐபிஎல் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல்லை விடவும் ஐசிசி உலககோப்பையை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை இந்திய மதிப்பில் 7 கோடி ரூபாய் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.