IND vs SL: இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் தேர்வு.. கடுமையாக சாடிய ஹர்பஜன் சிங்!
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இலங்கை தொடருக்கான (ODIs மற்றும் T20Is) இந்திய அணியின் தேர்வு குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இலங்கை தொடருக்கான (ODIs மற்றும் T20Is) இந்திய அணியின் தேர்வு குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
கம்பீர் தலைமையில் முதல் முறை:
இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தேர்வு அண்மையில் தேர்வு செய்யப்பட்டார். அதன்படி அவரது தலைமையில் இந்திய அணி முதல் முறையாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. இதில் இந்திய அணி ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்கான வீரர்கள் பட்டியலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது பிசிசிஐ.
அதன்படி பிசிசிஐ வெளியிட்ட இந்த வீரர்கள் பட்டியல் ரசிகர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதேபோல் வீரர்கள் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நிறைந்துள்ளதாக முன்னாள் வீரர்களும் பிசிசிஐ சாடி வருகின்றனர். குறிப்பாக ஒரு நாள் போட்டிக்கான வீரர்கள் பட்டியலில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரை பிசிசிஐ புறக்கணித்துள்ளது.
கடுமையாக சாடிய ஹர்பஜன் சிங்:
இதனை கடுமையாக சாடி இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "யுஸ்வேந்திர சாஹல், அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இலங்கைக்கான இந்திய அணியில் ஏன் இல்லை என்பதைப் புரிந்துகொள்வது கடினம்" என்று கூறியுள்ளார்.
சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் ஜிம்பாப்வேக்கு எதிரான T20Iகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள். அபிஷேக் 2வது T20I இல் சதம் விளாசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஜூலை 27 முதல் ஆகஸ்டு 7ம் வரை, 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று இந்தியா இலங்கை அணிகள் விளையாட உள்ளன.
ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி:
ரோஹித் ஷர்மா (C), சுப்மான் கில் (VC), விராட் கோலி, கேஎல் ராகுல் (WK), ரிஷப் பந்த் (WK), ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா
டி20 போட்டிக்கான இந்திய அணி:
சூர்யகுமார் யாதவ் (C), சுப்மன் கில் (VC), யஷஹ்வி ஜெய்ஷ்வால், ரிங்கு சிங், ரியான் பிராக், ரிஷப் பண்ட் (WK), சஞ்சு சாம்ச்ன (WK), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது.