Suryakumar Yadav: 'அரைதூக்கத்தில பேசாதீங்க!' பாண்டிங்கை விமர்சித்த பாக் வீரர்! இந்திய வீரரால் உருவான பஞ்சாயத்து!
சூர்யகுமார் யாதவை டிவில்லியர்ஸ் உடன் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பாண்டிங் ஒப்பிட்டிருந்தார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். இவர் ஐசிசியின் ரிவ்யூ நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி தொடர்பாக கருத்து தெரிவித்து வருகிறார். அந்தவகையில் இவர் இந்திய அணியின் ஆசிய கோப்பை அணி தொடர்பாகவும் சிலவற்றை தெரிவித்திருந்தார். அதில் இடம்பெற்று இருந்த சூர்யகுமார் யாதவ் குறித்து பாண்டிங் ஒரு விஷயத்தை கூறியுருந்தார். அதாவது அவரை தென்னாப்பிரிக்கா அணியின் டிவில்லியர்ஸ் உடன் ஒப்பிட்டு பாண்டிங் பேசியிருந்தார்.
இந்நிலையில் அவரின் இந்த கருத்து தொடர்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய யூடியூப் செனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சூர்யகுமார் யாதவிற்கே இந்த ஒப்பீடு மிகவும் அதிகமான ஒன்றாக தெரிந்து இருக்கும். ஏனென்றால் சூர்யகுமார் யாதவ் தற்போது தான் கிரிக்கெட் விளையாட தொடங்கியுள்ளார். அதற்குள் அவரை ஏபிடிவில்லியர்ஸ் உடன் ஒப்பிடுவதா? சூர்யகுமார் யாதவ் இன்னும் பெரிய தொடர்களில் விளையாடவில்லை. ஆகவே அவரை இவருடன் ஒப்பிடுவது சரியானதில்லை.
ஏபிடிவில்லியர்ஸ் ஒரு சிறப்பான வீரர். சமீப காலங்களில் அவரை போல் கிரிக்கெட் உலகில் வரவில்லை. அவர் விக்கெட்டை எடுக்கும் வரை எதிரணி மிகுந்த அசத்தில் இருப்பார்கள். அவர் களத்தில் இருந்தால் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் வகையில் திறமை கொண்டவர். அந்த மாதிரியான வீரர்கள் யாரும் சமீபத்தில் இல்லை. ஜோ ரூட், வில்லியம்சன், கோலி மற்றும் ரோகித் உள்ளனர். எனினும் டிவில்லியர்ஸ் இவர்களில் சற்று மாறுபட்டவர். ஆகவே பாண்டிங், சூர்யகுமாரை டிவில்லியர்ஸ் உடன் ஒப்பிட்டது அரைதூக்கத்தில் பேசுவதுபோல இருக்கிறது” என விமர்சனம் செய்தார்.
🗣 "Anyone that's seen him from a very young age knew that he had an abundance of talent."
— ICC (@ICC) August 16, 2022
On the ICC Review, Ricky Ponting recapped the journey of Suryakumar Yadav, India's top player in the @MRFWorldwide ICC Men's T20I Rankings for batters 📺
More 👉 https://t.co/nkevBVljMN pic.twitter.com/ec3aO5w3fi
முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், “சூர்யகுமார் யாதவை சிறுவயது முதல் பார்த்தவர்கள் அனைவரும் அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்று கூறியிருப்பார்கள். அவருடைய திறமை அந்த அளவிற்கு சிறப்பானது. அவரிடம் அனைத்து வகை ஷாட்களும் உள்ளன. 360 டிகிரியில் ஆட கூடிய திறமை சூர்யகுமார் யாதவிடம் உள்ளது. அவர் ஏபிடிவில்லியர்ஸை போல் சிறப்பாக ஆடி வருகிறார்” எனத் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்