Laxman Sivaramakrishnan: இந்தியாவிலே நிற பாகுபாட்டிற்கு ஆளாகினேன் - இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வேதனை
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லட்சுமண் சிவராமகிருஷ்ணன் இந்தியாவிலோ நிற பாகுபாட்டிற்கு ஆளாகியதாக வேதனை தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லட்சுமண் சிவராமகிருஷ்ணன். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் இந்திய அணிக்காக 1983ம் ஆண்டு முதல் 1987 வரை கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ளார். இந்த நிலையில், லட்சுமண் சிவராமகிருஷ்ணின் டுவிட் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் விவாதமாகி உள்ளது.
கடந்த 25-ந் தேதி கிரிக்கெட்டாலஜிஸ்ட் என்ற டுவிட்டர்வாசி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “லட்சுமண் சிவராமகிருஷ்ணன் போன்ற விமர்சகர்களிடம் இருந்து ஸ்பின்னர்கள் பற்றிய விமர்சனங்கள் கேட்பதற்கு மிகவும் நன்றாக உள்ளது. அவர்கள் பேசும் சிறிய நுணுக்கங்கள், நுணுக்கமான அம்சங்கள் மற்றும் எந்த இளம் சுழற்பந்து வீச்சாளர் அல்லது பயிற்சியாளர்களுக்கு கற்பதற்கு சிறப்பாக இருக்கும்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
For all the criticism they get about their comm people like @LaxmanSivarama1 sound so good when they r talking about spinners. The little nuances, finer aspects and technicalities of spin they talk r excellent points for any young spinner or coaches to listen.👏. #CricketTwitter
— Cricketologist (@AMP86793444) November 25, 2021
அவரது டுவிட்டருக்கு பதிலளித்துள்ள லட்சுமண் சிவராமகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில், “ என்னுடைய வாழ்க்கை முழுவதும் நான் விமர்சனங்களுக்கும், நிற பாகுபாட்டிற்கும் ஆளாகியுள்ளேன். அது இனி என்னை தொந்தரவு செய்யாது. ஆனால், துரதிஷ்டவசமாக இது நம் நாட்டிலே நடந்துள்ளது.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
I have been criticised and colour discriminated all my life, so it doesn’t bother me anymore. This unfortunately happens in our own country
— Laxman Sivaramakrishnan (@LaxmanSivarama1) November 26, 2021
லட்சுமண் சிவராமகிருஷ்ணன் 9 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 26 விக்கெட்டுகளையும், 16 ஒருநாள் போட்டிகளில் ஆடி 15 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் போட்டியில் ஒரு போட்டியில் தனது சிறந்த பந்துவீச்சாக 181 ரன்களை விட்டுக்கொடுத்து 12 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
— Abhinav mukund (@mukundabhinav) August 9, 2017
கடந்த 2017ம் ஆண்டு இந்திய மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் வீரர் அபினவ் முகுந்த் தான் எதிர்கொண்ட நிற பாகுபாடு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்