![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Virat kohli: இன்ஸ்டாகிராமில் 200 மில்லியன் ஃபாலோவர்கள்... சாதனை படைத்த விராட் வெளியிட்ட வீடியோ !
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோலியை இன்ஸ்டாகிராமில் 200 மில்லியன் பேர் பின் தொடர்ந்துள்ளனர்.
![Virat kohli: இன்ஸ்டாகிராமில் 200 மில்லியன் ஃபாலோவர்கள்... சாதனை படைத்த விராட் வெளியிட்ட வீடியோ ! Former Indian Captain Virat kohli First Indian athelet to get 200 million followers in Instagram Virat kohli: இன்ஸ்டாகிராமில் 200 மில்லியன் ஃபாலோவர்கள்... சாதனை படைத்த விராட் வெளியிட்ட வீடியோ !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/08/f1d672afa07e6899cdd745388fb744f0_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. இவருக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலும் பெரியளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்தச் சூழலில் விராட் கோலி இன்ஸ்டாகிராம் தளத்தில் தற்போது 200 மில்லியன் ஃபாலோவர்களை கொண்டு புதிய சாதனை படைத்துள்ளார்.
இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் 200 மில்லியன் ஃபாலோவர்களை கொண்ட முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் இன்ஸ்டாகிராம் தளத்தில் 200 மில்லியன் ஃபாலோவர்களை கொண்ட மூன்றாவது விளையாட்டு வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
View this post on Instagram
தனக்கு 200 மில்லியன் ஃபாலோவர்கள் வந்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விராட் கோலி ஒரு வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை ரசிகர்கள் வேகமாக வைரலாக்கி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் 200 மில்லியனுக்கு மேல் ஃபாலோவர்கள் கொண்ட வீரர்கள்:
கிறிஸ்டியானா ரொனால்டோ- 451 மில்லியன்
லியோனல் மெஸ்ஸி-334 மில்லியன்
விராட் கோலி- 200 மில்லியன்
கால்பந்து ஆட்டக்காரர்கள் கிறிஸ்டியானா ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்தப் படியாக விராட் கோலி இணைந்துள்ளார். இந்தப் பட்டியலில் இணைந்த முதல் இந்திய விளையாட்டு வீரர் விராட் கோலி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)