மேலும் அறிய

IND Vs Bang Test: 92 ஆண்டு கால சோகம் - டெஸ்ட் வரலாற்றில் சாதனை படைக்குமா ரோகித் படை? சென்னையில் இந்தியா Vs வங்கதேசம்

IND Vs Bang Test: வங்கதேச அணியுடனான தொடர் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா 92 ஆண்டு கால மோசமான சாதனையை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

IND Vs Bang Test: இந்தியா - வங்கதேச அணிகள் இடையேயான டெஸ்ட் தொடர், அடுத்த வாரம் சென்னையில் தொடங்க உள்ளது.

இந்தியா Vs வங்கதேசம் டெஸ்ட் தொடர்:

45 நாட்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் அணி அடுத்த வாரம் மீண்டும் களமிறங்க உள்ளது.  இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, வரும் 19ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. இதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, சென்னை வந்து பயிற்சிகளை தொடங்கியுள்ளது.  ஜூலை மாதம் ராகுல் டிராவிட்டிடம் இருந்து தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு, தலைமைப் பயிற்சியாளராக கம்பீரின் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். இந்த தொடரின் மூலம், டெஸ்ட் வரலாற்றில் 92 ஆண்டுகாலமாக நீடிக்கும் இந்தியாவின் மோசமான சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை, ரோகித் சர்மா தலைமையிலான அணி பெற்றுள்ளது.

92 ஆண்டுகால மோசமான சாதனை:

1932 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இந்தியா, இதுவர 579 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், தலா 178 ஆட்டங்களில் வெற்றி மற்றும்  178 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. அதேநேரம், 222 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன. இந்த சூழலில் சென்னை போட்டியில் வங்கதேச அணியை இந்தியா வீழ்த்தினால், ரோகித் சர்மா தலைமையிலான அணி ஒரு முக்கியமான சாதனையை நிகழ்த்தும். அதன்படி, வங்கதேசத்தை வீழ்த்தினால் இந்தியா டெஸ்ட் வரலாற்றில் 179வது வெற்றியை பெறும். அதாவது 1932க்குப் பிறகு முதல்முறையாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், இந்திய அணி தோல்விகளின் எண்ணிக்கையை காட்டிலும், வெற்றியின் எண்ணிக்கையை மிஞ்சும் வாய்ப்பை ரோகித் சர்மா தலைமையிலான படை பெற்றுள்ளது. 

டெஸ்ட் போட்டிகளில் அசத்தும் இந்தியா:

தலைமைப் பயிற்சியாளராக டிராவிட்டின் கடைசித் தொடரில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி  இல்லாத நிலயிலும், இந்திய அணி வெற்றி வாகை சூடியது. இதனிடையே,  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) போட்டிக்கான, இந்தியாவின் நிலையும் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி,  இந்தியா ஒரு கடினமான 10-போட்டிகளை கொண்ட டெஸ்ட் சீசனுக்கு தயாராகி வருகிறது. இதில், உள்நாட்டில் வங்கதேசத்திற்கு எதிரான 2 போட்டிகள், நியூசிலாந்திற்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் அந்நாட்டிற்கு எதிராக நடைபெற உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்- கவாஸ்கர் டிராபி தொடர் ஆகியவை அடங்கும்.  2வது டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் செப்டம்பர் 27ம் தேதி தொடங்குகிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்:

இந்தியா தற்போது 68.52 சதவீத புள்ளிகளுடன் டெஸ் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 62.50 சதவீத புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தானுக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் வெற்றியை தொடர்ந்து வங்கதேசம் 45.83 சதவீத புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.இரண்டாவது டெஸ்டில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் சதம் அடித்து, தொடரை வெல்ல வழிநடத்தியது குற்ப்பிடத்தக்கது.

வங்கதேச தொடருக்கான இந்திய அணி:

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி : ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் , சுப்மன் கில் , விராட் கோலி, கேஎல் ராகுல் , சர்ஃபராஸ் கான் , ரிஷப் பண்ட் , துருவ் ஜூரல், அஷ்வின், ஜடேஜா, அக்சர் படேல் , குல்தீப் யாதவ் , முகமது. சிராஜ், ஆகாஷ் தீப் , ஜஸ்பிரித் பும்ரா மற்றும் யாஷ் தயாள்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget