மேலும் அறிய

David Warner: ஆஸ்திரேலியா வரை எதிரொலித்த அயோத்தி ராமர் கோவில் திறப்பு; வார்னர் போட்ட போஸ்ட்

Ram Mandir: சுமார் ரூ. 8000 கோடியில் கட்டப்பட்ட ராமர் கோவில் இன்று அதாவது ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் திறக்கப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையான ஊடகங்களில் இடம் பெற்றுள்ள தலைப்புச் செய்தி அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு தொடர்பானதாகத்தான் உள்ளது. பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை பிரான பிரதிஷ்டை செய்ததும்தான். இந்த நிகழ்வுக்காக இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு படையெடுத்தனர். இதற்காக சிறப்பு ரயில்களும் நாடு முழுவதும் இருந்து அயோத்திக்கு இயக்கப்பட்டது.  ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

இந்த குடமுழுக்கு விழாவிற்கு நாடு முழுவதும் இருந்து சுமார்  எட்டு ஆயிரம் சிறப்பு மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கு ராமர் கோவில் அறக்கட்டளை சார்பாக அழைப்பிதழ்கள் நேரடியாக வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இப்படியான நிலையில், இன்று நடைபெற்ற ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் அவர்களின் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

ராமர் கோவில் திறப்பு விழா தொடர்பாக இணையத்தில் பலரும் தங்களது வாழ்த்துகளையும் பதிவுகளையும் பதிவிட்டு வருகின்றர். இதனால் இணையத்தில் நுழைந்தாலே  ராமர் கோவில் தொடர்பான செய்திகளும் தகவல்களும் குவிகின்றன. இப்படியான நிலையில் வெளிநாடுகளில் இருப்பவர்களும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் டேவிட் வார்னர் ராமர் கோவில் திறப்பிற்கு ”ஜெய் ஸ்ரீராம்  இந்தியா” என பதிவிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றது. 

View this post on Instagram
 
A post shared by David Warner (@davidwarner31)

ராமர் கோவில் குறித்த முக்கிய தகவல்கள்

அயோத்தி ராமர் கோயில் மொத்தம் 1800 கோடி ரூபாய் செலவில் 2.7 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. கோயில் கட்டப்பட்ட பகுதி 57,400 சதுர அடிகளைக் கொண்டுள்ளது. இது கட்டிடக்கலை முயற்சியின் பிரமாண்டத்தையும், அளவையும் பிரதிபலிக்கிறது.

கோயிலானது மொத்தமாக 360 அடி நீளமும் 235 அடி அகலமும் கொண்டிருக்க, அதன் சிகரத்தையும் சேர்த்து 161 அடியை உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கணிசமான அமைப்பு மூன்று தளங்களில் பரவியுள்ளது, ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டுள்ளது. போதிய அளவிலான இடவசதி வழங்கப்பட்டு இருப்பது, அங்கு பல்வேறு செயல்பாடு மற்றும் சடங்குகள் நடைபெற வழிவகை செய்கிறது. 

கோயிலின் அடித்தளம் கணிசமான எண்ணிக்கையிலான தூண்களால் ஆதரிக்கப்படுகிறது. தரை தளத்தில் 160 தூண்கள் உள்ளன. முதல் தளம் 132 தூண்களாலும், இரண்டாவது தளம், சிக்கலான வடிவமைப்பு மற்றும் விவரங்களைக் காண்பிக்கும், 74 தூண்களாலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இவை கோயிலின் ஒட்டுமொத்த ஸ்திரத்தன்மை மற்றும் அழகியலுக்கு பங்களிக்கிறது.

கோயிலுக்கு கீழே 2000 அடி ஆழத்தில் ஒரு டைம் கேப்ஸ்யூல் புதைக்கப்பட்டுள்ளது. அதில் ராமர் கோயில் மற்றும் ராமர் பற்றிய தகவல்கள் பொறிக்கப்பட்ட செப்பு தகடு உள்ளது. வருங்கால சந்ததியினருக்கு கோயிலின் விவரங்களை கடத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத முக்கியத்துவத்திற்கு அப்பால், ராமர் கோயில் ஒரு கலாசார மையமாக கருதப்படுகிறது. கல்வி இடங்கள் மற்றும் தியானத்திற்கான பகுதிகளைச் சேர்ப்பது ஆன்மீக, கலாச்சார மற்றும் கல்வி நோக்கங்களை வளர்ப்பதில் கோயிலின் பங்களிப்பை பிரதிபலிக்கிறது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணியில் எஃகு அல்லது இரும்பு முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு ஒரு தனித்துவமான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. பாரம்பரிய கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது.

ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட பன்சி பஹர்பூர் இளஞ்சிவப்பு மணற்கற்கள் பிரதான கோயில் அமைப்பைக் கொண்டுள்ளது. கிரானைட் கற்கள் அஸ்திவாரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இது கோயிலுக்கு நீடித்த அடித்தளத்தை வழங்குகிறது. கிரானைட்டின் பயன்பாடு, கோயிலின் ஒட்டுமொத்த ஆயுளுக்கு பங்களிப்பதோடு,  கட்டமைப்பில் வலிமையையும் சேர்க்கிறது. 

கட்டுமானமானது "ராம் ஷிலாஸ்" என்று அழைக்கப்படும் சிறப்பு செங்கற்களை உள்ளடக்கியது, அவற்றில் "ஸ்ரீ ராம்" என்று பொறிக்கப்பட்டுள்ளது. இந்த செங்கற்கள் ராமர் சேது பாலம் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கற்களை பறைசாற்றும் விதமாக பயன்படுத்தப்பட்டுள்ளன

நேபாளத்தின் கண்டகி ஆற்றில் காணப்படும் புனித புதைபடிவமான ஷாலிகிராம் பாறை ராமர் கோயில் கட்டுமானத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்து மதத்தில் போற்றப்படும், ஷாலிகிராம் விஷ்ணுவின் அடையாளமாகக் கருதப்படுகிறது, இது கோயிலுக்கு ஆன்மீக பரிமாணத்தை சேர்க்கிறது.

2587 மத வழிபாட்டுத் தலங்களின் புனித மண்ணைக் கொண்டு ராமர் கோயிலின் அடித்தளம் கட்டப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவிற்கு தாய்லாந்தின் அயுத்யா நகரில் இருந்தும் மண் அனுப்பப்பட்டுள்ளது. கூடுதலாக, தாய்லாந்தில் உள்ள சாவ் பிரயா, லோப் பூரி மற்றும் பா சாக் ஆகிய மூன்று நதிகளில் இருந்தும் தண்ணீர் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Australian Open 2025: ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
"பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது" ஆளுநர் ரவி பேச்சு
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vivek Ramaswamy DOGE Resign : பதவியேற்ற TRUMP..BYE சொன்ன விவேக்! திடீர் TWISTJagabar Ali Murder : ’’அநியாயம் பண்றாங்க’’அதிமுக நிர்வாகி படுகொலைஇறக்கும் முன் கடைசி வீடியோKomiyam Drinking Fact Check | கோமியம் குடிச்சா நல்லதா?IIT காமகோடி Vs மனோ தங்கராஜ் உண்மை நிலை என்ன?Appavu walk out : ஆளுநர் ரவி சர்ச்சை அப்பாவு வெளிநடப்பு !பீகார் சபாநாயகர்கள் மாநாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Australian Open 2025: ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
"பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது" ஆளுநர் ரவி பேச்சு
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
SSC MTS Result 2024 OUT: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு வெளியானது.! கட் ஆஃப் எவ்வளவு ?
SSC MTS Result 2024 OUT: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு வெளியானது.! கட் ஆஃப் எவ்வளவு ?
துருக்கி ரிசார்ட்டில் தீ விபத்து - 66 பேர் பலி; 51 பேர் படுகாயம் - நடந்தது என்ன?
துருக்கி ரிசார்ட்டில் தீ விபத்து - 66 பேர் பலி; 51 பேர் படுகாயம் - நடந்தது என்ன?
துப்பாக்கி சுடும் பயிற்சி; எல்லை தாண்டி மீன் பிடிக்காதீங்க - தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை
துப்பாக்கி சுடும் பயிற்சி; எல்லை தாண்டி மீன் பிடிக்காதீங்க - தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை
பரந்தூரில் ஏர்போர்ட் - பயப்படாதீங்க: விடாப்பிடியாக விளக்கம் கொடுக்கும் தமிழக அரசு 
பரந்தூரில் ஏர்போர்ட் - பயப்படாதீங்க: விடாப்பிடியாக விளக்கம் கொடுக்கும் தமிழக அரசு 
Embed widget