மேலும் அறிய

David Warner 100th Test: 100வது டெஸ்டில் இரட்டை சதம்; ருத்ரதாண்டவம் ஆடிய டேவிட் வார்னர்..! மிரண்டு போன தெ.ஆப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் இரட்டை சதமடித்து அசத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் இரட்டை சதமடித்து அசத்தியுள்ளார். 

பாக்சிங் டே சதம்:

கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு மறுநாள் நடைபெறும்  டெஸ்ட் போட்டி ‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படும். கடந்த ஆண்டு இந்த பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில்  இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியிருந்தது. இதனிடையே இந்தாண்டுக்கான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியாவும் - டீன் எல்கர் தலைமையிலான தென்னாப்பிரிக்காவும் மோதி வருகின்றன. நேற்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 68.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகப்பட்சமாக மார்கோ ஜென்சன் 59 ரன்களும், கைல் வெரைன் 52 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறினர்.தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்திருந்தது. 

View this post on Instagram
 
A post shared by ICC (@icc)

100வது டெஸ்ட்டில் இரட்டை சதம்:

இதனிடையே இன்று 2 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தனது 100வது டெஸ்ட் போட்டியில் ஆடிய ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை விளாசி தள்ளினார். தொடர்ந்து தனது 25வது டெஸ்ட் சதம் அடித்து அசத்திய வார்னர், 100வது டெஸ்ட் போட்டியில் சதமடித்த வீரர்களின் பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்தார். ஆனாலும் வார்னரின் அசுர தாண்டவம் நின்ற பாடில்லை. 

பந்துகளை பவுண்டரிகள், சிக்ஸர்களுமாக விளாசிய அவர் 254 பந்துகளில் தனது இரட்டை சதத்தை எட்டினார். இதன்பின்னர் ரிடையர்ட் ஹர்ட் முறையில் வார்னர் பெவிலியன் திரும்பினார். அவருக்கு பக்க பலமாக அடித்த ஆடிய ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கைவசம் இன்னும் விக்கெட்டுகள் இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவை விட  150 ரன்களுக்கு மேல் முன்னிலைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  

டேவிட் வார்னர் சாதனை

சர்வதேச அளவில் தனது 100வது டெஸ்டில் விளையாடி இரட்டை சதமடித்த 2வது வீரர் என்ற பெருமையை டேவிட் வார்னர் பெற்றுள்ளார். முதல் இடத்தில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஜோ ரூட் உள்ளார். இவர் கடந்தாண்டு இந்திய அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா முழுவதும் காட்டுத்தீயா பரவி இருக்கு" கொதிக்கும் உதயநிதி!
"எம்பி பதவியும் இல்ல.. அமைச்சர் பதவியும் இல்ல" நாம் தமிழரில் இருந்து விலகிய காளியம்மாளின் முதல் பேட்டி!
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து..  இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து.. இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
CUET Exam 2025: கியூட் தேர்வுத் தேதி அட்டவணை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
கியூட் தேர்வுத் தேதி அட்டவணையை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth | ”தலைவர் அரசியலுக்கு வருவார்? 2026ல்  நிச்சயம் நடக்கும்” ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்NEET Suicide | NEET தேர்வு பயம் மாணவி தூக்கிட்டு தற்கொலை விழுப்புரத்தில் பரபரப்பு..! | Villupuramதேசிய அரசியலில் விஜய்! மோடி, நிதிஷ்-க்கு ஸ்கெட்ச்! பிரசாந்த் கிஷோரின் மூவ்Kaliyammal DMK | எகிறிய டிமாண்ட்!குழப்பத்தில் காளியம்மாள்!தவெகவா? திமுகவா? அதிமுகவா? | MK Stalin | TVK | ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா முழுவதும் காட்டுத்தீயா பரவி இருக்கு" கொதிக்கும் உதயநிதி!
"எம்பி பதவியும் இல்ல.. அமைச்சர் பதவியும் இல்ல" நாம் தமிழரில் இருந்து விலகிய காளியம்மாளின் முதல் பேட்டி!
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து..  இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து.. இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
CUET Exam 2025: கியூட் தேர்வுத் தேதி அட்டவணை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
கியூட் தேர்வுத் தேதி அட்டவணையை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
2 முதலமைச்சர்களை கொடுத்தது தேனி.! நேக்கா ஓபிஎஸ்-ஐ கழட்டிய இபிஎஸ்.! 3 முதல்வர்தானே.!
2 முதலமைச்சர்களை கொடுத்தது தேனி.! நேக்கா ஓபிஎஸ்-ஐ கழட்டிய இபிஎஸ்.! 3 முதல்வர்தானே.!
TN Rain: சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க.! இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை இருக்கு..!
சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க.! இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை இருக்கு..!
திருமா சொன்னதை முதல்வர் ஸ்டாலினுக்கு Dedicate செய்கிறேன் - நக்கலடித்த செல்லூர் ராஜூ
திருமா சொன்னதை முதல்வர் ஸ்டாலினுக்கு Dedicate செய்கிறேன் - நக்கலடித்த செல்லூர் ராஜூ
மனு கொடுத்தா.. உங்களுக்கு பிச்சை கேக்குறா மாறி இருக்கா? பாஜக அமைச்சரை பொளக்கும் மக்கள்
மனு கொடுத்தா.. உங்களுக்கு பிச்சை கேக்குறா மாறி இருக்கா? பாஜக அமைச்சரை பொளக்கும் மக்கள்
Embed widget