மனைவியை விவாகரத்து செய்கிறேனா? தீயாய் பரவிய மெசேஜ்: அலறியடித்து ஓடிவந்த சாஹல்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுவேந்திர சாஹல். இவர் இரண்டாண்டுகளுக்கு முன்னர் பிரபல நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுவேந்திர சாஹல். இவர் இரண்டாண்டுகளுக்கு முன்னர் பிரபல நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தனஸ்ரீ வர்மா இன்ஸ்டா, ட்விட்டர் என எல்லா சமூக வலைதளங்களிலும் படு ஆக்டிவாக இருப்பவர். இதனால் அவருக்கு ரசிகர்களும் ஏராளம், ஏராளம். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடருகின்றனர்.
இந்த தம்பதியின் திருமணம் யுவேந்திர சாஹல் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. திருமணத்திற்குப் பின்னர், இன்ஸ்டாகிராமில் 'தனஸ்ரீ சஹால்' என்ற பெயருடன் தனஸ்ரீ தனது சமூக வலைத்தள கணக்கை நிர்வகித்து வந்தார்.
இந்த நிலையில் அவர் தற்போது தனது கணவரின் பெயரை நீக்கி மீண்டும் தனஸ்ரீ வர்மா என மாற்றியுள்ளார். இதை தொடர்ந்து சஹால் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "புதிய வாழ்க்கை தயாராகிறது" என பதிவிட்டு இருந்தார்.
அதேபோல், வேதனையைக் கூட ஓர் இளவரசி சக்தியாக மாற்றுவார் என்றும் பதிவிட்டிருந்தார்.
View this post on Instagram
இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.
இந்நிலையில் தான் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் பெயரில் கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் நடிகை தனஸ்ரீ விவாகரத்து கோரி பஞ்சாப் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் விவாகரத்து உறுதியானதாக தகவல்கள் காட்டுத்தீ போல் பரவிய நிலையில், அது உண்மையில் போலி கணக்கில் இருந்து தங்கள் லோகோவுடன் பகிரப்பட்ட செய்தி என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
Please note: All three are fake accounts impersonating ANI. No such news has been flashed. pic.twitter.com/rIRwhzneit
— ANI (@ANI) August 18, 2022
ஆனாலும் சமாதானம் அடையாத நெட்டிசன்கள் இது சமந்தா, நாகசைதன்யா பாணி அறிவிப்போ என்று விவாதித்து வருகின்றனர். பிரபல நடிகை சமந்தா ரூத் பிரபுவும் நாக சைதன்யாவை பிரியும் முன்பு சமூக வலைதள கணக்குகளில் இருந்து அகினேனி என்று கணவர் குடும்பப் பெயரை நீக்கினார். இதனால் சாஹல்- தனஸ்ரீ வர்மா இருவரும் திருமண வாழ்வில் இருந்து பிரிகிறார்களா என ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர்.
யுவேந்திர சாஹல் இந்த விஷயத்தில் தலையிட்டு யாரும் எவ்வித வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.