மேலும் அறிய

ENG vs IND: இங்கிலாந்துக்கு எதிரான கோலி இல்லாத இந்திய அணி.. மாற்று வீரராக புஜாரா, ரஹானே திரும்புவது கடினம்!

அனுபவ வீரர் சேதேஷ்வர் புஜாரா அல்லது அஜிங்க்யா ரஹானே இந்திய அணிக்கு திரும்புவார்களா என்ற கேள்விக்கு பதில் 'இல்லை' என்பதுதான். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற ஜனவரி 25 முதல் தொடங்குகிறது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே, தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி முதல் இரண்டு போட்டிகளுக்கான தனது பெயரை வாபஸ் பெற்றார். இப்போது விராட் கோலிக்கு பதிலாக எந்த வீரரை பிசிசிஐ தேர்வுக்குழு சேர்க்க விரும்புகிறது என்பதுதான் கேள்வி. இத்தகைய சூழ்நிலையில், அனுபவ வீரர் சேதேஷ்வர் புஜாரா அல்லது அஜிங்க்யா ரஹானே இந்திய அணிக்கு திரும்புவார்களா என்ற கேள்விக்கு பதில் 'இல்லை' என்பதுதான். 

கடந்த வாரம் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட அணியை இந்திய அணி அறிவித்தது. விராட் கோலி தற்போது விலகியதற்கு பிறகு, இன்னும் 15 வீரர்கள் அணியில் உள்ளனர். விராட்டின் மாற்று வீரர் இங்கு அறிவிக்கப்பட்டாலும், தற்போதுள்ள 15 பேர் கொண்ட அணியில் இருந்து மட்டுமே விளையாடும் 11-ஐ தேர்வு செய்ய முடியும். இதை கருத்தில் கொண்டே பிசிசிஐ, விராட் கோலிக்கு பதிலாக மாற்று வீரரை அறிவிக்கும். விராட் இல்லாத பட்சத்தில் சுப்மன் கில் நம்பர் 3 விளையாடினால், 4வது இடமான மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுவது உறுதி. 

விராட் கோலிக்கு பதிலாக ரஹானே அல்லது புஜாரா மாற்று வீரராக அறிவிக்கப்படுவது கடினமே. இவர்கள் இருவருக்குப் பதிலாக தற்போது இந்தியா ஏ அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரருக்கு வாய்ப்பு அளிக்கவே பிசிசிஐ விரும்புகிறது. இதையடுத்து, கோலிக்கு பதிலாக ரஜத் படிதார் பெயரே அதிகளவில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. 

ரஹானே திரும்புவது ஏன் கடினம்?

ரஞ்சி கோப்பையின் இந்த சீசனில் அஜிங்க்யா ரஹானே சொதப்பி வருகிறார். கடந்த இரண்டு ரஞ்சி போட்டிகளில் விளையாடி மூன்று இன்னிங்ஸ்களில் வெறும் 16 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிலும், இரண்டு முறை அவர் டக் அவுட் ஆகியுள்ளார். அத்தகைய சூழ்நிலையில், ரஹானே இந்திய அணிக்கு திரும்புவது தற்போதைக்கு சாத்தியமற்றது. ரஹானே கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்தார். 

புஜாரா நல்ல ஃபார்மில் இருக்கிறார் ஆனால்...

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சேதேஷ்வர் புஜாரா கடைசியாக இந்திய அணிக்காக விளையாடினார். இதன் பிறகு, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இருந்தும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும், ரஞ்சி கோப்பையில் புஜாரா பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் மூன்று ரஞ்சி போட்டிகளில் 5 இன்னிங்ஸ்களில் 444 ரன்கள் எடுத்துள்ளார். இதில், ஒரு இரட்டை சதமும் அடங்கும்.  

புஜாரா தற்போது ரஞ்சி கோப்பையில் நல்ல பார்மில் இருப்பதாகத் தெரிகிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், இந்த காலகட்டத்தில் புஜாரா இன்னும் சில நல்ல இன்னிங்ஸ்களை ரஞ்சியில் விளையாடினால், கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் இடம் கிடைக்கலாம். இருப்பினும், இந்திய டெஸ்ட் அணியில் தற்போது இந்திய இளம் வீரர்களுக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. இப்படியான சூழ்நிலையில், புஜாராவுக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது அரிதே. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget