BCCI Next President: பிசிசிஐ அடுத்த தலைவர் யார்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! ரேசில் முந்தும் சவுரவ் கங்குலி!
BCCI-யின் அடுத்த தலைவர் யார் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் சவுரவ் கங்குலி மற்றும் கிரண் மோர் ஆகியோரின் பெயரும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அடுத்த தலைவர் யார் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் சவுரவ் கங்குலி மற்றும் கிரண் மோர் ஆகியோரின் பெயரும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
பிசிசிஐ-யின் அடுத்த தலைவர்:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தின் போது ஒரு முக்கிய அறிவிப்பை பிசிசிஐ வெளியிடும் என்று தெரிகிறது. அதாவது பிசிசிஐ-யின் தற்போதைய தலைவராக இருக்கக்கூடிய ரோஜர் பின்னி 70 வயதை கடந்துள்ளாதால் அடுத்த தலைவரை நியமிக்கும் முனைப்பில் தீவிரமாக களமிறங்கியுள்ளது பிசிசிஐ.
இந்தியாவில் மிகப்பிரபலமான விளையாட்டாக இருக்கும் கிர்க்கெட்டில் பிசிசிஐ தலைவர் என்பது ஒரு முக்கிய பொறுப்பாக பார்க்கப்படுகிறது. அதாவது உலக அளவில் உள்ள கிரிக்கெட் வாரியங்களில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தான் அதிக செல்வாக்கு உள்ள ஒன்றாக இருக்கிறது. இதனால் இந்த பதவியும் முக்கியமானதாக உள்ளது.
முன்னணி போட்டியாளர்கள்:
பிசிசிஐ-யின் அடுத்த தலைவர் யார் என்ற ரேசில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அதேபோல், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கின் பெயரும் இதில் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ரகுராம் பட், கிரண் மோர் ஆகியோர் பெயரும் இந்தியன் பிரீமியர் லீக்கின் முன்னாள் தலைவருமான ராஜூவ் சுக்லா ஆகியோரின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
ஒருமித்த தேர்வு:
இதனிடையே எல்லோரும் இணைந்து ஒருமனதாக யாராவது ஒருவரை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்கின்றனர் பிசிசிஐ வட்டாரங்களில். இதில் சவுரவ் கங்குலியை மீண்டும் பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை
வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியிடப்படும். தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெறும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.




















