Babar breaks Kohli's record: கேப்டன் கோலியின் ரெக்கார்டை முறியடித்த பாபர் அசாம்- முழு விவரம் இதோ!
சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் 1000 ரன்களை கடந்திருக்கும் பாபர் அசாம், அதிவேகமாக 1000 ரன்களை கடந்த கேப்டன் என்ற கோலியின் ரெக்கார்டை முறியடித்துள்ளார்.
டி-20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய அணி எதிர்கொண்ட முதல் போட்டியில், பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது. அடுத்து, நாளை நடக்க இருக்கும் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இதுவரை, மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள, பாகிஸ்தான் அணி ஹாட் - ட்ரிக் வெற்றிகளை பெற்று அரை இறுதி வாய்ப்பை வலுப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அக்டோபர் 29-ம் தேதி நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடிய கேப்டன் பாபர் அசாம் அரை சதம் கடந்தார். இந்த போட்டியில் அரை சதம் கடந்தது மூலம், சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் 13 முறை 50+ ரன்களை ஸ்கோர் செய்த கேப்டனானர் பாபர் அசாம். இதன் மூலம், 13 முறை இந்திய அணி கேப்டனாக 50+ ரன்களை ஸ்கோர் செய்திருந்த கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
Babar 🤝 Kohli
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 30, 2021
அதுமட்டுமின்றி, இந்த போட்டியில் ரன் குவித்ததன் மூலம் சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் 1000 ரன்களை கடந்திருக்கும் அவர், அதிவேகமாக 1000 ரன்களை கடந்த கேப்டன் என்ற கோலியின் ரெக்கார்டை முறியடித்துள்ளார். 26 இன்னிங்ஸில் அரை சதம் கடந்திருக்கிறார் பாபர் அசாம். கோலியைப் பொருத்தவரை, 30 இன்னிங்ஸில் அரை சதம் கடந்திருக்கிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில், டி-20 கிரிக்கெட்டில், அதிவேகமாக 2000 ரன்களை எடுத்த பேட்டர்கள் வரிசையில் கோலியின் ரெக்கார்டை முறியடித்திருந்த அவர், இப்போது கேப்டனாகவும் இந்த ரெக்கார்டை முறியடித்துள்ளார்.
சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் வேகமாக 1000 ரன்களை கடந்த டாப் 5 கேப்டன்கள்
கேப்டன் | இன்னிங்ஸ் |
பாபர் அசாம் | 26 |
விராட் கோலி | 30 |
டுப்ளெஸி | 31 |
ஆரன் ஃபின்ச் | 32 |
கேன் வில்லியம்சன் | 36 |
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்