(Source: ECI/ABP News/ABP Majha)
David Warner| ட்விட்டரில் ரசிகர் வைத்த கோரிக்கை.. 27 நாட்கள்.. டேவிட் வார்னர் கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்
ட்விட்டரில் ரசிகர் ஒருவர் வைத்த கோரிக்கையை ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் நிறைவேற்றியுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் டேவிட் வார்னர். இவர் ஐபிஎல் தொடரில் கடந்த சீசன் வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். அப்போது முதல் அவர் தெலுங்கு படங்கள் தொடர்பான பாடல்களுக்கு நடனம் ஆடுவது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வது போன்ற விஷயங்களை செய்து வந்தார். இதன்காரணமாக இவருக்கு இந்தியாவில் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.
இந்நிலையில் அவருடைய தீவிர ரசிகரான வேதாந்தி ஹரிஷ் குமார் என்ற ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் தினமும் அவருக்கு ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். கடந்த 27 நாட்களாக தினமும் அவர் டேவிட் வார்னர் நீங்கள் என்னுடைய ட்வீட்டிற்கு பதிலளிக்கும் வரையில் நான் ட்வீட் செய்து கொண்டு இருப்பேன் என்று கூறி ட்வீட் செய்துள்ளார். முதல் நாள் செய்த ட்வீட்டில்,”உங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். ஆனால் நீங்கள் என்னுடைய குறுஞ்செய்திக்கு பதிலளிக்கவில்லை. இதனால் ட்வீட்டரில் நீங்கள் எனக்கு பதிலளிக்கும் வரையில் நான் ட்வீட் செய்வேன்” என்று பதிவிட்டிருந்தார்.
Day 1 of tweeting until @davidwarner31 replies 🥺🤗
— vedanthi Harish Kumar (@VedanthiHarish) November 27, 2021
குறிப்பாக தொடர்ச்சியாக தொடர்ந்து ட்வீட் செய்து வந்த நபர் 15ஆவது நாளின் முடிவில்,”நீங்கள் நான் எத்தனை நாட்கள் இப்படி ட்வீட் செய்வேன் என்பதை பார்ப்பதற்காக எனக்கு பதிலளிக்காமல் உள்ளீர்கள் என்று கருதுகிறேன். நீங்கள் எனக்கு பதிலளிக்கும் வரை நான் தொடர்ந்து ட்வீட் செய்து கொண்டே இருப்பேன்” எனப் பதிவிட்டார்.
Day 16 of tweeting until @davidwarner31 replies 🥺🤗
— vedanthi Harish Kumar (@VedanthiHarish) December 12, 2021
I think u checking how long I will tweet let me clear I will tweet until ur reply ..... https://t.co/ncJuomIgf6
இந்தச் சூழலில் 27-வது நாளான இன்றும் அவர் தன்னுடைய ட்வீடை செய்திருந்தார். அந்த ட்வீட்டை பார்த்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்,”என்னை மன்னிக்கவும். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?” எனப் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த அந்த நபர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். தனக்கு பதிலளித்த வார்னருக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.
Sorry how are you https://t.co/JvjnPjtfgw
— David Warner (@davidwarner31) December 23, 2021
மேலும் படிக்க: டெஸ்ட் கேப்டன்சியில் ஸ்மித், வில்லியம்சன், ரூட்... முன்னோடி விராட்கோலி சம்பவங்கள்!