மேலும் அறிய

Under 19 WC 2024 Final: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ஆஸ்திரேலியாவை பழி தீர்க்குமா இந்தியா? இன்று நேருக்கு நேர் மோதல்!

இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை வரலாற்றில், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இறுதிப் போட்டியில் இரண்டு முறை மோதியுள்ளன.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணி, 8 முறை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளது. அதில், இந்திய அணி 5 முறை சாம்பியன் பட்டத்தையும், 3 முறை இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. 

உலகக்கோப்பை இறுதிப்போட்டி:

இந்தநிலையில், ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களம் இறங்குகிறது. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியாவும், பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளன. 

இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை வரலாற்றில், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இறுதிப் போட்டியில் இரண்டு முறை மோதியுள்ளன. இந்த இரண்டு முறையும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது முறையாக நடைபெறவுள்ளது.

போட்டியை எங்கு காணலாம்..?

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான இறுதிப் போட்டி பெனோனியில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியானது இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியினை இந்திய ரசிகர்கள் கண்டு களிக்கலாம். இது தவிர, ஜியோ சினிமாவில், இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் முழு போட்டியையும் பார்க்கலாம்.

பெனோனி பிட்ச் எப்படி..?

போட்டி நடைபெறும் பெனோனி வில்லோமூர் பார்க்கில் உள்ள பிட்ச் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என இருவருக்கும் சாதகமாக இருக்கும். போட்டியின் தொடக்கத்தில் பந்துவீச்சாளர்கள் புதிய பந்தில் பவுன்ஸ் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு இதுவரை 27 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ள நிலையில், இதுவரை முதலில் பேட்டிங் செய்த அணி எட்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

இதுவரை விளையாடிய போட்டி விவரங்கள்: 

  • மொத்த ஒருநாள் போட்டிகள்: 27
  • முதலில் பேட்டிங் செய்து வென்ற போட்டிகள்: 8
  • இரண்டாவது பேட்டிங் செய்து வென்ற போட்டிகள்: 17
  • சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்: 233
  • சராசரி இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர்: 279
  • அதிகபட்ச ஸ்கோர்: தென்னாப்பிரிக்கா vs ஜிம்பாப்வே 399/6
  • துரத்தப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்: இலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களை துரத்தியது.
  • குறைந்தபட்ச ஸ்கோர்: நெதர்லாந்து எதிரான போட்டியில் பெர்முடா அணி 91 ரன்களுக்குள் சுருண்டது.

இரு அணிகளின் விவரம்: 

இந்தியா:
 
உதய் சஹாரன் (கேப்டன்), அர்ஷின் குல்கர்னி, ஆதர்ஷ் சிங், ருத்ரா மயூர் படேல், சச்சின் தாஸ், பிரியான்சு மோலியா, முஷீர் கான், ஆரவெல்லி அவனிஷ் ராவ் (விக்கெட் கீப்பர்), சௌமி குமார் பாண்டே (துணை கேப்டன்), முருகன் அபிஷேக், இன்னேஷ் மகாஜன் (விக்கெட் கீப்பர் ), தனுஷ் கவுடா, ஆராத்யா சுக்லா, ராஜ் லிம்பானி, நமன் திவாரி.
 
ஆஸ்திரேலியா:
 
ஹக் வெய்ப்ஜென் (கேப்டன்), லாச்லான் ஐட்கென், சார்லி ஆண்டர்சன், ஹர்கிரத் பஜ்வா, மஹ்லி பியர்ட்மேன், டாம் காம்ப்பெல், ஹாரி டிக்சன், ரியான் ஹிக்ஸ் (விக்கெட் கீப்பர்), சாம் கான்ஸ்டாஸ், ரஃபேல் மேக்மில்லன், எய்டன் ஓ'கானர், ஹர்ஜாஸ் சிங், டாம் ஸ்ட்ரேக்கர், கால்லம் விட்லர், ஒல்லி பீக்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
Vikravandi Child Death: குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
Embed widget