Asia Cup Records: ஆசிய கோப்பை வரலாற்றில் பதிவான அசத்தலான சாதனைகள் இதுதான்..! மறக்க முடியாத தருணங்கள்!
ஆசிய கோப்பை தொடர் தொடங்கப்பட்ட 1984 ம் ஆண்டு முதல் பதிவான மறக்க முடியாத சாதனைகளின் பட்டியலை கீழே காணலாம்.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் மற்றொரு அணியும் இணைந்து ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதி பெறும் ஒரு அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பி பிரிவில் இடம்பெற்றுள்ளன. ஆகஸ்ட் மாதம் 27ம் ம் தேதி தொடங்கவுள்ள இந்தப் போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், ஆசிய கோப்பை தொடர் தொடங்கப்பட்ட 1984 ம் ஆண்டு முதல் பதிவான மறக்க முடியாத சாதனைகளின் பட்டியலை கீழே காணலாம்.
- ஆசிய கோப்பை வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அர்ஷத் அயூப் பெற்றுள்ளார். கடந்த 1988ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்த சாதனையை பதிவு செய்தார்.
- 2008 ஆசிய கோப்பையில் இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் இந்திய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 6/13 என்ற முறையில் வீழ்த்தி கோப்பை வெல்ல உதவி செய்தார்.
- 2010 ஆசிய கோப்பையில், சேவாக் 2.5 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி 6 ரன்கள் கொடுத்தார், இது அந்த சீசனில் ஒரு இன்னிங்ஸில் ஒரு பந்துவீச்சாளரின் சிறந்த ஸ்ட்ரைக் ரேட் ஆகும்.
- 2012-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஆசிய கோப்பையில் நீண்ட இன்னிங்ஸ் விளையாடியவர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். அன்றைய போட்டியில் விராட் கோலி148 பந்துகளில் 183 ரன்கள் எடுத்தார்.
- ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை இலங்கை முன்னாள் வீரர் ஜெயசூர்யா படைத்துள்ளார். அவர் இதுவரை ஆசிய கோப்பை தொடரில் 1220 ரன்கள் எடுத்துள்ளார்.
- முத்தையா முரளிதரன் 30 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இவரே ஆசிய கோப்பை தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
- ஒரு கேப்டனாக மகேந்திரசிங் தோனி ஆசிய கோப்பையில் அதிக போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுவரை கேப்டனாக இவர் 19 போட்டிகளில் விளையாடி 14 போட்டிகளில் வெற்றியை பெற்றுள்ளார். அதில் இரண்டு கோப்பைகளும் அடங்கும்.
ஆசிய கோப்பையில் இதுவரை பங்கேற்ற அனைத்து நாடுகளிலும் இந்திய அணிதான் அதிக முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்தியா 7 முறையும், இலங்கை ஐந்து முறையும், பாகிஸ்தான் இரண்டு முறையும் வென்றுள்ளது.
ஆசியக் கோப்பை வரலாற்றில் வீரர்களின் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சு என்று இரண்டு பிரிவுகளிலும் இலங்கை அணியே அதிக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதிலும், முதல் 5 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய பந்துவீச்சாளர்கள் யாரும் இடம்பெறவில்லை. இர்பான் பதான் 22 விக்கெட்டுகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா (19 விக்கெட்) 9வது இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் (17 விக்கெட்) 13வது இடத்திலும் உள்ளனர். இருப்பினும், முதல் 5 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரும், ரோகித் சர்மாவும் உள்ளனர். விராட் கோலி 766 ரன்களுடன் ஆறாவது இடத்தில் உள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்