IND vs PAK: மோசமான சைகை காட்டிய பாகிஸ்தான் வீரர்கள்..சாட்டையை சுழற்றிய ஐசிசி!பாக்.வீரர்களுக்கு விளையாட தடை?
சர்ச்சைக்குரிய வகையில் சைகை காட்டிய பாகிஸ்தான் வீரர்கள் சாஹிப்சாதா மற்றும் ஃபர்ஹான் ஹாரிஸ் ரவூப் ஆகியோருக்கு அடுத்த சில போட்டிகளில் விளையாட தடைவிதிக்க ICC முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆசிய கோப்பை 2025 சூப்பர் 4 ஆட்டத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் சைகை காட்டிய பாகிஸ்தான் வீரர்கள் சாஹிப்சாதா மற்றும் ஃபர்ஹான் ஹாரிஸ் ரவூப் ஆகியோருக்கு அடுத்த சில போட்டிகளில் விளையாட தடைவிதிக்க ICC முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மோசமான சைகை காட்டிய பாக்.வீரர்கள்:
ஐக்கிய அரசு அமீரகத்தில் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குரூப் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் தற்போத சூப்பர் 4 ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில், செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் அபிஷேக் ஷர்மா மற்றும் திலக் வர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதே நேரம் இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவூப் இந்திய ரசிகர்களை பார்த்து ஆத்திரம் மூட்டும் சைகையை காண்பித்தது சமூக வலைதளங்களில் வைரலானது. அதே போல், சாஹிப்சாதாவும் மோதலை தூண்டும் விதத்தில் சைகை காட்டினார். இது மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது.
நடவடிக்கை எடுக்க தயாராகும் ஐசிசி:
பாகிஸ்தான் வீரர்களின் இந்த செயல்பாட்டிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து இந்திய அணி ஐசிசியிடம் இது தொடர்பாக புகார் அளித்ததாக சொல்லப்படுகிறது. மறுபுறம் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீது பாகிஸ்தான் வீரர்கள் ஐசிசியிடம் புகார் அளித்தனர். இந்த நிலையில் தான் இந்திய அணியின் புகாரை ஐசிசி விசாரணைக்கு எடுத்துள்ளது. விசாரணையில் சாஹிப்சாதா தான் அரசியல் ரீதியில் எந்த சைகைகளையும் காட்டவில்லை. எங்கள் அணியின் கொண்டட்டங்களில் அதுவும் ஒன்று என்று கூறினார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் எம்.எஸ்.தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரும் இது போன்ற கொண்டாட்டங்களை செய்துள்ளனர் என்றும் கூறியிருக்கிறார். ஆனாலும் பாகிஸ்தான் வீரர்களின் விளக்கத்தை ஐசிசி ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அடுத்த சில போட்டிகளில் விளையாடுவதற்கு சாஹிப்சாதா மற்றும் ஃபர்ஹான் ஹாரிஸ் ரவூப் ஆகியோருக்கு ஐசிசி தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.




















