Asia Cup 2022: ரிஷப் பண்ட் அணியில் இல்லாதது வருத்தம்... ஆனால் கார்த்திக்...-கருத்து கூறிய முன்னாள் இந்திய வீரர்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் இடம்பெறாதது தொடர்பாக முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது யுஏஇயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது. அந்தப் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்காரணமாக இந்திய அணி பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இடம்பெறவில்லை.
இந்நிலையில் ரிஷப் பண்ட் அணியில் இடம்பெறாதது தொடர்பாக முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாஃபர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில விளையாட்டு தளத்தின் நிகழ்ச்சியில் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதில், “ரிஷப் பண்ட் இல்லாமல் ஆடுவது மிகவும் கடினமான ஒரு முடிவாக இருந்திருக்கும். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ரிஷப் பண்ட் சமீபத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
Thriller of a match 🥶 and what a way to start the series.
— Rishabh Pant (@RishabhPant17) August 28, 2022
Onwards and Upwards 🇮🇳💪 pic.twitter.com/hy8vaRIFAk
ஆனால் டி20 போட்டிகளில் அவர் சமீபத்தில் சிறப்பாக செயல்படவில்லை. குறிப்பாக ஐபிஎல் தொடரிலும் அவர் நன்றாக விளையாடவில்லை. ஆனால் ஐபிஎல் தொடர் முதல் தினேஷ் கார்த்திக் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவருக்கு அணியில் என்ன செய்ய வேண்டும் என்று சரியாக தெரிந்துள்ளது. இருப்பினும் பண்ட் இல்லாததால் எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான். அணியில் ஜடேஜா தவிர வேறு இடது கை ஆட்டக்காரர்கள் இல்லை என்பது தான் அது” எனத் தெரிவித்துள்ளார்.
இதே நிகழ்ச்சியில் பேசிய மற்றொரு முன்னாள் இந்திய வீரர் தீப்தாஸ் குப்தா,”தினேஷ் கார்த்திக் அணியில் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக உணர்ந்துள்ளார். அவர் அதை சரியாகவும் செய்து வருகிறார். ஆனால் ரிஷப் பண்டிற்கு டி20 அணியில் இது தான் இடம் என்று ஒன்று இல்லை. ஆகவே அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் களமிறங்கியது அணியின் ஒரு சிறந்த ப்ளான். அதை நான் வரவேற்கிறேன். எனினும் பண்ட் இடம்பெறாததில் எனக்கு சற்று வருத்தம் தான்” எனக் கூறியுள்ளார்.
இந்திய அணி நாளை நடைபெறும் இரண்டாவது போட்டியில் ஹாங்காங் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அந்தப் போட்டியில் ரிஷப் பண்ட் களமிறங்குவாரா என்பதை பொறுத்திருந்ததான் பார்க்க வேண்டும்.
முன்னதாக பாகிஸ்தான் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டி20 போட்டிகளில் இந்திய கேப்டனாக அதிக வெற்றி பெற்ற பட்டியலில் ரோகித் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அத்துடன் இவர் விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார். அதாவது இந்திய அணியின் டி20 கேப்டனாக ரோகித் சர்மா தற்போது வரை 36 போட்டிகளில் செயல்பட்டுள்ளார். அவற்றில் ரோகித் சர்மா 30 போட்டிகளில் வெற்றியும், 6 போட்டிகளில் தோல்வியையும் அடைந்துள்ளார்.