ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்: 205 டார்கெட்.. ஸ்டார்க்கின் மிரட்டல் கேட்ச்! முதல் மூன்று இன்னிங்ஸில் நடந்த அதிசயம்!
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு 205 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து.

148 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் முதல் மூன்று இன்னிங்ஸ்களில் முதல் விக்கெட், ரன்கள் எதுவுமின்றி விழுந்துள்ளது இதுவே முதல்முறையாகும். அத்துடன், ஒரு அற்புதமான கேட்சை பிடித்து ஸ்டார்க் அசத்தியுள்ளார்.
2025-2026 ஆம் ஆண்டுக்கான தொடக்கப் போட்டியான ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து முதல் டெஸ்டில், ஆஷஸ் தொடரில் பந்து வீச்சாளர்கள் அதிக அளவில் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர். டெஸ்டின் முதல் நாளில் 19 விக்கெட்டுகள் வீழ்ந்தன. இது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.
இரண்டாவது நாளான் இன்று இங்கிலாந்தின் முதல் விக்கெட் கிரிக்கெட் வரலாற்றை உருவாக்கும் வகையில் விழுந்துள்ளது. ஜாக் கிராலி மிட்செல் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியின் முதல் மூன்று இன்னிங்ஸ்களில் முதல் விக்கெட், ரன்கள் எடுக்காமல் விழுந்தது இதுவே முதல் முறையாகும்.
முதல் இன்னிங்ஸில், க்ராலியின் விக்கெட்டை ஸ்டார்க் வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸிலும் மீண்டும் ஒரு முறை கிராலியை டக் அவுட் ஆக்கி அசத்தியுள்ளார் ஸ்டார்க். முதல் ஓவரின் 5வது பந்தில், கிராலி ஒரு பந்தை பவுன்ஸ் என்று தவறாகக் கணித்து அடிக்க, அதை ஸ்டார்க் ஒரு கையால் அற்புதமாக கேட்ச் பிடித்தார்.
மிட்செல் ஸ்டார்க்கின் அற்புதமான கேட்சை பாருங்கள்
WHAT A RIDICULOUS TAKE! Mitchell Starc sends Zak Crawley off for a pair! #Ashes | #PlayoftheDay | @nrmainsurance pic.twitter.com/1cg8PtLzx4
— cricket.com.au (@cricketcomau) November 22, 2025">
இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தத் தயாராக இருப்பதாகத் தோன்றியது. ஆனால் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் எதிர்த்துப் போராடியதால் முதல் நாளில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்திருந்தது. பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2 ஆம் நாளில்,நாதன் லியோனின் விக்கெட் வீழ்த்தியதால் ஆஸ்திரேலியா 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனைதொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடிய வர இங்கிலாந்து 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, ஆஸ்திரேலியா வெற்றி பெற 205 ரன்கள் டார்கெட்டை நிர்ணயித்துள்ளது. லீட் 200 ரன்களுக்கு மேல் இருப்பதால் இங்கிலாந்து வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.




















