Ashes Series 2023: இன்று தொடங்கும் ஆஷஸ் யுத்தம்.. ரெக்கார்ட்ஸ் பட்டியலில் யார் முதலிடம்..? எங்கே எப்படி பார்ப்பது? முழு விவரம்
வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு பாட் கம்மின்ஸ் கேப்டனாகவும், இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸும் தலைமை தாங்குகின்றனர்.
2023 ஆஷஸ் தொடர் ஜூன் 16 (இன்று) முதல் தொடங்க இருக்கிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது இன்று பர்மிங்காவில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது.
ஆஷஸ் யுத்தம்:
இந்த வரலாற்று சிறப்புமிக்க தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு பாட் கம்மின்ஸ் கேப்டனாகவும், இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸும் தலைமை தாங்குகின்றனர்.
சரியாக கடந்த 18 மாதங்களுக்கு முன்பு இரு அணிகளும் மோதியபோது ஆஸ்திரேலிய மண்ணில் 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து, இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும் பென் ஸ்டோக்ஸும், தலைமை பயிற்சியாளராக மெக்கலமும் பொறுப்பேற்ற பிறகு, புதிய ரூபம் பெற்றது. இவர்களின் கீழ் இங்கிலாந்து அணி 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11ல் வெற்றிபெற்றது.
அதேபோல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கெத்து காட்டியது. எனவே இன்றுமுதல் ஆஷஸில் அதிரடிதான்.
இதுவரை படைக்கப்பட்ட ரெக்கார்ட்ஸ்கள்:
போட்டிகள்: 340
- இங்கிலாந்து வெற்றி: 108
- ஆஸ்திரேலியா வெற்றி:140
- டிரா : 92
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள்: ஜாக் ஹோப்ஸ் 71 இன்னிங்ஸில் 3636 ரன்கள் எடுத்துள்ளார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் (ஆக்டிவ் பிளேயர்): ஜோ ரூட் 56 இன்னிங்ஸ் 2016 ரன்கள் எடுத்துள்ளார்.
- இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் : டான் பிராட்மேன் 63 இன்னிங்ஸ்களில் 5028 ரன்கள் எடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் (ஆக்டிவ் பிளேயர்) : ஸ்டீவ் ஸ்மித் 56 இன்னிங்ஸில் 3044 ரன்கள் எடுத்துள்ளார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதம்: ஜாக் ஹோப்ஸ்- 12
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதம் (ஆக்டிவ் பிளேயர்): ஜோ ரூட் & பென் ஸ்டோக்ஸ் - 3
- இங்கிலாந்துக்கு எதிராக அதிக சதம் : டான் பிராட்மேன் - 19
- இங்கிலாந்துக்கு எதிராக அதிக சதம் (ஆக்டிவ் பிளேயர்): ஸ்டீவ் ஸ்மித் - 11
இரு அணிகளின் முழுவிவரம்:
இங்கிலாந்து அணி:
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), ஸ்டூவர்ட் பிராட், ஹாரி புரூக், சாக் க்ராலி, பென் டக்கெட், டான் லாரன்ஸ், ஒல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஆலி ராபின்சன், ஜோ ரூட், ஜோஷ் டங்கு, கிறிஸ் வோக்ஸ் , மார்க் வூட்
ஆஸ்திரேலியா அணி:
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், மிட்ச் மார்ஷ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா , ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்
ஆஷஸ் 2023 அட்டவணை:
- முதல் டெஸ்ட்: ஜூன் 16 - ஜூன் 20, எட்ஜ்பாஸ்டன்
- இரண்டாவது டெஸ்ட்: ஜூன் 28 - ஜூலை 2, லார்ட்ஸ்
- மூன்றாவது டெஸ்ட்: ஜூலை 6 - ஜூலை 10, ஹெடிங்லி
- நான்காவது டெஸ்ட்: ஜூலை 19 - ஜூலை 23, ஓல்ட் டிராஃபோர்ட்
- ஐந்தாவது டெஸ்ட்: ஜூலை 27 - ஜூலை 31, ஓவல்
ஆஷஸ் 2023 தொடரை எங்கே? எப்படி பார்ப்பது?
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக பார்க்கலாம்.