மேலும் அறிய

Ashes Test: தொடரை வெல்லுமா ஆஸ்திரேலியா? முட்டுக்கட்டை போட தயாராகும் இங்கிலாந்து.. ஆஷஸ் 4வது டெஸ்ட் இன்று தொடக்கம்

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. 

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. 

பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருக்கும் இந்த தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ளது. இதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும், 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றது. 

இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் இன்று தொடங்குகிறது. சமீபகாலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி காட்டி வரும் இங்கிலாந்து முதல் 2 டெஸ்டில் தோற்றாலும் 3வது போட்டியில் சுதாரித்துக் கொண்டு வெற்றி பெற்று அசத்தியது. இந்த 4வது போட்டியில் அந்த அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி ஆலி ராபின்சனுக்கு பதிலாக மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் அணியில் தொடர்ந்து இடம் பெற,  தனது பழைய ஃபார்மை மீட்க இந்த போட்டி மிக முக்கியமானதாகும். அதேபோல் ஜானி பேர்ஸ்டோவும் தனது ஃபார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். 

இந்த பக்கம் ஆஸ்திரேலிய அணியை எடுத்துக் கொண்டால் கடந்த டெஸ்டில் காயத்தால்  ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்ட மிட்செல் மார்ஷ்  கிட்டத்தட்ட 4 ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் அணியில் களம் கண்டு சதம் அடித்தார். இப்போது கேமரூன் கிரீன் குணமடைந்து உடல்தகுதியை எட்டி விட்ட நிலையில், இதனால் யாரை சேர்ப்பது?  அணி நிர்வாகத்துக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உகந்தது என்பதால் சுழற்பந்து வீச்சாளர் டாட் மர்ஃபி கழற்றி விடப்பட்டு கேமரூன் க்ரீன் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கிட்டதட்ட இரு அணிகளும் சரிசம பலத்துடன் திகழ்வதால் இந்த போட்டியில் யார் வெல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்ற ஆஸ்திரேலியாவும், தொடரைக் கைப்பற்றும் போட்டியில் நீடிக்க இங்கிலாந்தும் மல்லுக்கட்டும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. போட்டி நடக்கும் ஓல்டு ட்ராப்ஃபோர்டு மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி இதுவரை 31 டெஸ்டில் விளையாடி 9 போட்டிகளில் வெற்றி, 7 போட்டியில் தோல்வி, 15 போட்டிகளில் டிரா கண்டுள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
Embed widget