Watch Video: நூறாவது டெஸ்டில் சொதப்பிய ஸ்மித்.. வெற்றிக்கு பிறகு இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டல்.. வைரலாகும் வீடியோ!
ஆஷஸ் தொடரில் சில ரசிகர்கள் அளவுக்கு மீறி ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை வித்தியாசமாக கேலி செய்த வீடியோ ஒன்று இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஹெடிங்லி டெஸ்டில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னேற்றம் கண்டுள்ளது.ஆட்டத்தின் நான்காவது இன்னிங்சில் 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி, ஹாரி புரூக்கின் 75 ரன்கள் உதவியுடன் 7 விக்கெட் இழப்புக்கு இந்த இலக்கை எட்டி அசத்தியது. இங்கிலாந்து அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நான்காவது நாளில் இங்கிலாந்து அணி எப்படியாவது வெற்றிபெற்று விடும் என நம்பிக்கை அந்நாட்டு ரசிகர்கள் குதூகலம் அடைந்து தொடர்ந்து மைதானத்தில் ஆடி, பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதிலும், சில ரசிகர்கள் அளவுக்கு மீறி ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை வித்தியாசமாக கேலி செய்த வீடியோ ஒன்று இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
மூன்றாவது டெஸ்டில் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 7 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது கிறிஸ் வோக்ஸ் மற்றும் மார்க் வுட் ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 24 ரன்களை எடுத்து இங்கிலாந்து அணிக்கு திரில் வெற்றியை தேடித்தந்தனர்.
❤️ The match-winning moment...
— England Cricket (@englandcricket) July 9, 2023
Chris Woakes, what a man 👏 #EnglandCricket | #Ashes pic.twitter.com/hnhvEMu0jR
இந்த போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, ஸ்டாண்டில் அமர்ந்திருந்த இங்கிலாந்து அணியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். இதற்கிடையில், சில ரசிகர்கள் ஸ்டீவ் ஸ்மித் அழுவது போன்ற முகமூடியை அணிந்து கொண்டு அவரை கிண்டல் செய்தனர். இந்த முகமூடியில் இருக்கும் ஸ்மித்தின் புகைப்படம் 2018 ஆம் ஆண்டு, பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை செய்யப்பட்டபோது ஸ்டீவ் ஸ்மித் அழுத புகைப்படம் ஆகும்.
100வது டெஸ்டில் சொதப்பிய ஸ்டீவ் ஸ்மித்:
ஆஷஸ் தொடரின் ஹெடிங்லி 3வது டெஸ்ட் போட்டியானது ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு 100வது போட்டியாகும். இந்த போட்டியில் ஸ்மித் சிறப்பாக விளையாடுவார் என்றும், இவருக்கு கேரியர் பெஸ்டாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த 100வது டெஸ்ட் போட்டியில் ஸ்மித்திடம் இருந்து பெரிய இன்னிங்ஸ் எதுவும் வெளிப்படுத்தவில்லை இது ஆஸ்திரேலிய ரசிகர்கள் அனைவருக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஸ்டீவ் ஸ்மித் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் 22 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 2 ரன்களும் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இரு அணிகளுக்கும் 9 நாட்கள் இடைவெளி கிடைத்துள்ளது, இந்த ஆஷஸ் தொடரின் நான்காவது போட்டி ஜூலை 19 முதல் மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.