Ashes 2023 2nd Test: போட்டியை தடுக்க முயன்ற போராட்டக்காரர்கள் - தூக்கிச்சென்று வெளியே தள்ளிய பேர்ஸ்டோவ்
Ashes 2023 2nd Test: இங்கிலாந்தில் எரிபொருளுக்கு எதிராக உள்ள ”ஸ்டாப் ஆயில்” இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டாவது ஆஷஸ் போட்டியை தடுக்க முயற்சி செய்தனர்.
Ashes 2023 2nd Test: இங்கிலாந்தில் எரிபொருளுக்கு எதிராக உள்ள ”ஸ்டாப் ஆயில்” இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டாவது ஆஷஸ் போட்டியை தடுக்க முயற்சி செய்தனர்.
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸஷ் டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஏற்கனவே முடிந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இன்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது.
இதனால் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்யத் தொடங்கியது. போட்டி தொடங்கி முதல் ஓவர் வீசி முடிந்ததும், ரசிகர்கள் மத்தியில் இருந்த ஸ்டாப் ஆயில் இயக்கத்தைச் சேர்ந்த இருவர், மைதனத்திற்குள் நுழைந்து, மறைத்து வைத்திருந்த ஆரஞ்சு நிற பெயிண்ட் பவுடரை மைதானத்தில் வீசினர். இதனை மைதானத்தில் இருந்த இங்கிலாந்து அணி வீரர்களும், ஆஸ்திரேலிய அணி வீரர்களும் தடுக்க முயற்சித்தனர். ஆனால் அவர்களைக் கண்டுகொள்ளாத ஸ்டாப் ஆயில் இயத்தினர், பெயிண்ட் பவுடரை மைதானத்தில் வீசுவதை தொடர்ந்து செந்து வந்தனர். இதனால் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவ் ஸ்டாப் ஆயில் இயத்தைச் சேர்ந்த ஒருவரை தூக்கிக்கொண்டு மைதானத்திற்கு வெளியே சென்றார். அதன்பின் மைதானத்தில் இருந்த காவலர்கள் அவர்களைப் பிடித்துச்சென்றனர்.
JONNY BAIRSTOW HAS CAUGHT ONE! #Ashes2023 pic.twitter.com/pgGsZ3xgiB
— Cricket.com (@weRcricket) June 28, 2023
ஸ்டாப் ஆயில் இயக்கத்தைச் சேர்ந்தவரை தூக்கிக்கொண்டு சென்றதால், பேரிஸ்டோவின் ஜெர்சி மற்றும் க்ளவுஸில் பெயிண்ட் பவுடர் ஆனதால், தனது ஜெர்ஸியை மாற்றச் சென்றார். தற்போது இந்த நிகழ்வு குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் போராட்டக்காரர்கள் இதற்கு முன்னர், சரசன்ஸ் மற்றும் சேல் இடையே ட்விகன்ஹாமில் நடந்த கல்லாகர் பிரீமியர்ஷிப் இறுதிப் போட்டியையும் நடத்த முடியாமல் செய்தனர். அதாவது, ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் டி-ஷர்ட் அணிந்த இரண்டு ஆண்கள் முதல் பாதியின் நடுவே ஆடுகளத்தை ஆக்கிரமித்து, பாதுகாப்பு ஊழியர்களால் அகற்றப்படுவதற்கு முன்பு ஆரஞ்சு பெயிண்ட்டை மைதானத்தில் வீசினர்.
அதேபோல், கடந்த ஏப்ரலில் நடந்த உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியின் போது க்ரூசிபிளில் இதேபோன்ற சம்பவம் நடந்தது. ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் டி-ஷர்ட் அணிந்த ஒருவர் மேஜை ஒன்றின் மீது குதித்து, துணியின் மேல் ஆரஞ்சுப் பொடியைக் கொட்டியதால், ஜோ பெர்ரிக்கு எதிரான ராபர்ட் மில்கின்ஸ் போட்டி தடைபட்டது குறிப்பிடத்தக்கது.