Asian Games 2023: 72 ஆண்டுகளுக்கு பின் முதல் பதக்கம்.. ஆர்வம் இன்றி ஆசியக் கோப்பையில் பதக்கம்.. யார் இந்த கிரண் பாலியன்..?
தற்போது, கிரண் பாலியன் பற்றிதான் இந்தியாவே பேசிக்கொண்டு இருக்கும் நிலையில், நம்மளும் அவரை பற்றி கொஞ்சம் பேசுவோம், தெரிந்துகொள்வோம்...
சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் கிரண் பாலியன் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வெல்லும் 33வது பதக்கம் இதுவாகும்.
கிரண் தனது மூன்றாவது முயற்சியில் 17.36 மீட்டர் தூரம் எறிந்து இந்தப் பதக்கத்தை வென்றார். இந்த போட்டியில் சீன வீராங்கனைகள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். தற்போது, கிரண் பாலியன் பற்றிதான் இந்தியாவே பேசிக்கொண்டு இருக்கும் நிலையில், நம்மளும் அவரை பற்றி கொஞ்சம் பேசுவோம், தெரிந்துகொள்வோம்...
யார் இந்த கிரண் பாலியன்..?
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கிரண் பாலியன், ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகள போட்டியில் நாட்டிற்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்து அசத்தியுள்ளார்.நேற்று, கிரண் பாலியன் ஷாட் புட்டில் 17.36 மீட்டர் குண்டு எறிந்து வெண்கலம் பதக்கம் வென்றார். இதன்மூலம், 72 ஆண்டுகளுக்கு பிறகு பெண்களுக்கான குண்டு எறிதலில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும். இதற்கு முன், கடந்த 1951ல் நடந்த முதல் டெல்லி ஆசிய விளையாட்டுப் போட்டியில், மும்பையை சேர்ந்த ஆங்கிலோ-இந்தியரான பார்பரா வெப்ஸ்டர் வெண்கலம் வென்றிருந்தார். அதன் பிறகு, கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த ஆசிய போட்டியில் மன்பிரீத் கவுர் ஐந்தாவது இடத்தைப் பிடித்ததே அதிகபட்சமாக இருந்தது. அப்போது மன்பிரீத்தின் சிறந்த எறிதல் 16.25 மீட்டராக பதிவானது. இதையடுத்து, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான குண்டு எறிதலில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பாலியன் பெற்றார்.
பதக்கம் வென்றததற்கு பிறகு தன்னை பற்றி பேசிய கிரண் பாலியன், “நான் மீரட்டைச் சேர்ந்தவள். என் அப்பா மீரட் பகுதியில் போக்குவரத்து போலீஸ் ஹெட் கான்ஸ்டபிள், என் அம்மா வீட்டை கவனித்து கொள்கிறார். எனக்கு ஒரு சகோதரர் மற்றும் ஒரு சிறிய நாய் உள்ளது. அந்த நாயும் எனக்கு சகோதரன் போன்றது.
நான் இளமையாக இருந்ததில் இருந்தே, எனக்கு எந்தவொரு குறிப்பிட்ட விளையாட்டிலும் ஈடுபாடு ஏற்படவில்லை. இருப்பினும், நான் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் கலந்துகொள்வேன். ஈட்டி எறிதல் போட்டியில் கூட கலந்துகொண்டேன். ஆனால் 2014 ஆம் ஆண்டு பாலியான் தனது சொந்த ஊரில் ஒரு ஷாட் புட் நிகழ்வில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது வேடிக்கையான நிகழ்வு ஒன்று நடந்தது. 2014 ஆம் ஆண்டு, மீரட்டில் உள்ள டிபிஎஸ் பள்ளியில் நடந்த வடக்கு மண்டல போட்டியில், எனது பெயர் வேறொரு பெண்ணுக்குப் பதிலாக தவறுதலாக பதிவு செய்யப்பட்டு, அதில் பங்கேற்றேன். மூன்று பெண்கள் மட்டுமே அதில் கலந்து கொண்டோம். அதிலும் நான் மூன்றாவது இடத்தைப் பிடித்தேன். அங்கிருந்துதான் என் கேரியரைத் தொடங்கினேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ ஆரம்பத்தில் இருந்தே குண்டு எறிதலில் எனக்கு ஆர்வம் இல்லை. இருப்பினும், நான் பல விளையாட்டுகளை விளையாடினேன். நான் ஒரு பெரிய கூட்டத்தின் முன் போட்டியிடுகிறேன், இது ஆசிய விளையாட்டுகள், எனவே இயல்பாகவே, நான் சற்று பதட்டமாக இருந்தேன், ஆனால் எனது முயற்சியால் வெண்கலம் பதக்கம் வென்றேன்.” என்றார்.
இதுவரை கிரண் பாலியன் பெற்ற பதக்கங்கள்:
பாலியனின் முதல் தேசிய போட்டி: கடந்த 2015 இல் ராஞ்சியில் நடந்த தேசிய U18 சாம்பியன்ஷிப்பில் 12.49 மீ எறிந்து ஆறாவது இடத்தைப் பிடித்தார். பின்னர் 2018 ஆம் ஆண்டு தேசிய U-20 சாம்பியன்ஷிப்பில் 15.23 மீ எறிந்து தங்கம் வென்றார்.
அதே ஆண்டு, கொழும்பில் நடந்த தெற்காசிய U-20 சாம்பியன்ஷிப்பையும் வென்றார். தொடர்ந்து, கடந்த 2020 ம் ஆண்டு கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றார். 2022 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டியில் 17.14 மீ எறிந்து தங்கம் வென்றார். இந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த தேசிய மாநிலங்களுக்கு இடையேயான சாம்பியன்ஷிப்பில் தங்க பதக்கம் வென்றார்.