மேலும் அறிய

முருகனை வணங்கினால்.. ஆரம்பித்தது சஷ்டி விரத காலம்.. கந்தசஷ்டி விரதமும், பலனும்....!

கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்கினால் தீராத நோய்கள் தீரும், திருமண பாக்கியம் கை கூடி வரும், புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கந்த சஷ்டி விரதமிருந்து இவ்வாறு முருகனை வழிபட்டால் வீட்டின் கஷ்டங்கள் நீங்கி இன்பம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்று காலம் காலமாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கந்த சஷ்டி விரதம்  இருக்கின்றனர். சஷ்டி விரத பலன்கள் சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், முருகனுக்கு உகந்த சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவேதான் குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும்  சிறந்த விரதமாகும்.

முருகனை வணங்கினால்.. ஆரம்பித்தது சஷ்டி விரத காலம்.. கந்தசஷ்டி விரதமும், பலனும்....!

குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைபிடிக்கலாம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. கந்த சஷ்டி விரத மகிமை கந்த சஷ்டி விரதத்தை பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் குழந்தைகளும் அனுஷ்டிக்கின்றனர். மாணவர்கள் கல்விக்காகவும், திருமணமான பெண்கள் குடும்ப நன்மைக்காகவும் குழந்தை வரம் வேண்டியும், கன்னிப்பெண்கள் திருமண வரம் வேண்டியும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா திருச்செந்தூர் உள்ளிட்ட முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில்  தொடங்கியுள்ளது.

முருகனை வணங்கினால்.. ஆரம்பித்தது சஷ்டி விரத காலம்.. கந்தசஷ்டி விரதமும், பலனும்....!

கந்த சஷ்டி விரதமிருந்து இவ்வாறு முருகனை வழிபட்டால் வீட்டின் கஷ்டங்கள் நீங்கி இன்பம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்று காலம் காலமாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கந்த சஷ்டி விரதம்  இருக்கின்றனர். இந்த விரதம் உண்ணாமல் இருக்க வேண்டும் . கடுமையாக விரதம் இருப்பவர்கள் 7 நாள் விரதத்தில் மிளகு விரதம் கடைபிடிப்பார்கள். முதல் நாள் ஒரு மிளகு, இரண்டாம் நாளில் இரண்டு மிளகு, என ஏழு நாட்கள் மிளகு உண்டு விரதம் இருப்பவர்கள் உண்டு. இளநீர் மட்டும் எடுத்து கொள்வது, பாலும் பழமும் மட்டும் எடுத்துக்கொள்வது, கீரை உணவு வகைகள் மட்டும் எடுத்து கொள்வது, சிலர் ஒரு வேளை உணவு உண்டு விரதமும், சிலர் காலை தவித்து மீதமுள்ள இரண்டு வேலைகள் உண்டும் விரதம் இருப்பார்கள்.

முருகனை வணங்கினால்.. ஆரம்பித்தது சஷ்டி விரத காலம்.. கந்தசஷ்டி விரதமும், பலனும்....!

அவரவர் ஆரோக்கியத்தை பொறுத்து விரத முறையை தேர்ந்து எடுத்து கொள்வார்கள். இந்த விரதத்தில் தண்ணீர் அருந்துவது தோஷம் இல்லை. போதுமான அளவு தண்ணீர் எடுத்து கொள்ளலாம். பகலில் தூங்குவதை தவிர்ப்பது நலம். பருத்தி ஆடைகள், பச்சை மற்றும் காவி நிற ஆடைகளை விரத காலத்தில் உடுத்தி கொள்ளலாம்.

முருகனை வணங்கினால்.. ஆரம்பித்தது சஷ்டி விரத காலம்.. கந்தசஷ்டி விரதமும், பலனும்....!

கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்கினால் தீராத நோய்கள் தீரும் திருமண பாக்கியம் கை கூடி வரும் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி சஷ்டி வரை ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து கந்த சஷ்டி விரதம் கடைபிடிக்க வேண்டும். விரதம் இருப்பவர்கள் மறந்தும் கூட சில தவறுகளை செய்யக்கூடாது.

முருகனை வணங்கினால்.. ஆரம்பித்தது சஷ்டி விரத காலம்.. கந்தசஷ்டி விரதமும், பலனும்....!

சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்ரமணியருக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்பார்கள். நம் வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் இருந்தாலும் அவைகள் யாவும் நொடியில் நீங்கி, பகைவர்கள் ஒழிந்து முன்னேற்றம் உண்டாக, தன்னம்பிக்கை அதிகரிக்க சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்க வேண்டும். உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. எனவே உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது.

முருகனை வணங்கினால்.. ஆரம்பித்தது சஷ்டி விரத காலம்.. கந்தசஷ்டி விரதமும், பலனும்....!

கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருப்பது அவசியம். கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம். ஆனால், வயோதிகர்கள், நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல் நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Embed widget