Chithirai Festival: கோலியனூர் புத்துவாயம்மன் கோயில் சித்திரை தேராட்டம் - தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
விழுப்புரம் அருகே வெகு விமரிசையாக நடைபெற்ற புத்துவாயம்மன் கோயில் சித்திரை தேராட்டம்.
விழுப்புரம் அருகே புத்துவாயம்மன் கோயில் சித்திரை தேராட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் அமைந்துள்ள புத்துவாயம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த மாதன் 26ஆம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. 14 நாட்கள் நடைபெறு இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்கலாரங்கள் செய்யப்பட்டு பூஜைகளும் அம்மன் வீதியுளா நிகழ்வும் நடைபெறும். திருவிழாவின் 12ஆம் நாளான இன்று முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாரானதை செய்யப்பட்டு 60 அடியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் அமர வைக்கப்பட்டு, ஆயுரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
முதலில் விநாயகர் அமர வைக்கப்பட்ட தேர் செல்ல பின்னே அம்மன் அமர வைக்கப்பட்ட தேர் சென்றது. தேரானது கோலியனூர் கடை தெருவில் தொடங்கிய தேர் தோப்புத்தெரு, மேற்கு தெரு, கிழக்கு தெரு, நாப்பாளைய தெரு, வள்ளலார் நகர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்ததடைந்தது. இந்த தேர் திருவிழாவில் கோலியனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏறாளமான கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்துக்கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். தேர் திருவிழவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்