ஆன்மீகம்: கரூர் காந்தி கிராம மாரியம்மன் ஆலய திருவிழா கம்பம் புறப்பாடு நிகழ்வுடன் நிறைவு
தொடர்ந்து பூத்தட்டு, வடிசோறு மாவிளக்கு, அக்னிசட்டி, பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விசேஷங்களுடன் திருவிழாவானது ஒரு வார காலம் விமர்சையாக நடைபெற்றது.
கரூரில் மகா மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி மாத திருவிழா கம்பம் புறப்பாடு நிகழ்வுடன் நிறைவடைந்தது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி மாத திருவிழா கம்பம் போடும் நிகழ்வுடன் கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது.
தொடர்ந்து பூத்தட்டு, வடிசோறு மாவிளக்கு, அக்னிசட்டி, பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விசேஷங்களுடன் திருவிழாவானது ஒரு வார காலம் விமர்சையாக நடைபெற்றது.
மகா மாரியம்மன் வைகாசி திருவிழாவின் இறுதி நாளான நேற்று கம்பம் புறப்படுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பெண் பக்தர்கள் ஏராளமானோர் முளைப்பாரி ஏந்தி ஊர்வலமாக வந்தடைந்த பின், சரியாக மாலை 7 மணி அளவில் கோவிலில் இருந்து எடுக்கப்பட்ட கம்பம், வானவேடிக்கை நிகழ்வுடன் முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு, காந்திகிராமம் காலனி அரசு நடுநிலைப்பள்ளி அருகில் அமைந்துள்ள கேணியில் விடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்