![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Karthigai deepam festival: அண்ணாமலையார் கோயில் தீபதிருவிழா; காவல் எல்லை தெய்வ வழிபாடு துர்கை அம்மன் உற்சவம் இரவு முதல் துவக்கம்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலின் தீபத்திருவிழா நாளை முதல்
![Karthigai deepam festival: அண்ணாமலையார் கோயில் தீபதிருவிழா; காவல் எல்லை தெய்வ வழிபாடு துர்கை அம்மன் உற்சவம் இரவு முதல் துவக்கம் Tiruvannamalai temple Karthigai Deepam 2023 durgai amman festival start tonight TNN Karthigai deepam festival: அண்ணாமலையார் கோயில் தீபதிருவிழா; காவல் எல்லை தெய்வ வழிபாடு துர்கை அம்மன் உற்சவம் இரவு முதல் துவக்கம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/14/020aab97b3e6c7923c772ffa6f1649b61699952678941113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில், பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா வரும் 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 4.45 மணிக்கு மேல் 6.13 மணிக்குள், அருணாச்சலேஸ்வரர் கோவிலில் 3ம் பிரகாரத்தில் உள்ள சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, தொடர்ந்து 10 நாட்கள் தீபத்திருவிழா உற்சவம் நடைபெறும். பின்னர், துர்க்கையம்மன் உற்சவம் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் அதைத்தொடர்ந்து நாளை (15ம் தேதி) பிடாரி அம்மன் உற்சவமும், (16ம் தேதி) நடைபெறும் விநாயகர் உற்சவமும் அண்ணாம லையார் கோவில் இருந்து சாமி புறப்ட்டு மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். கொடியேற்றம் பிறகு அன்று முதல் 9 நாட்களுக்கு காலை மற்றும் இரவு நேரங்களில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவர். 23-ந் தேதி நடைபெறும் 7-வது நாள் தேரோட்ட உற்சவத்தில் காலை 7.30 மணிக்கு மேல் விநாயகர் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதன் பிறகு ஒன்றன் பின் ஒன்றாக 5 தேர்கள் மாட வீதியில் வடம்பிடித்து பக்தர்கள் இழுப்பார்கள்.
விழாவின் 10ம் நாளான கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீப தரிசன நாளான 26-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபம் சிவனே மலையாக போற்றும் மலையின் உச்சியில் மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருள, ஆண்டுக்கு 5 நிமிடம் மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவம் ஆடியபடி வந்தபின்னர் மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் அதனைத்தொடர்ந்து , கார்த்திகை தீபத்திருவிழாவின் தொடக்கமாக, காவல்எல்லை தெய்வ வழிபாடு நடைபெறுவது வழக்கம். தீபத்திருவிழா எந்த இடையூறும் இல்லாமல், பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் நடக்க வேண்டி தொடர்ந்து 3 நாட்கள் எல்லை தெய்வ வழிபாடு நடைபெறும். அதன்படி, துர்க்கை அம்மன் உற்சவம் இன்று நடக்கிறது. அதையொட்டி, அருணாச்சலேஷ்வரர் கோவிலில் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் இன்று நடைப்பெற்று வருகிறது.
சின்னக்கடை வீதியில் உள்ள துரக்கை அம்மன் கோயிலில், இரவு 8 மணி அளவில் காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மன் உட்பிரகாரம் வலம் வந்து அருள்பாலிக்கிறார். இந்நிலையில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு அருணாச்சலேஷ்வரர் கோவிலில் உள்ள அனைத்து கோபுரங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பிரகாசிக்கின்றது. மேலும் கோவிலின் வண்ண விளக்கு அளங்காரங்களை கண்டு பக்தர்கள் வியந்து ரசிக்கின்றனர். மேலும், அண்ணாமலையார் சன்னதியில் எதிரே உள்ள தங்க கொடிமரத்தில் கொடி ஏற்ற உள்ளதால் தங்க கொடிமரத்தினை சுத்தம் செய்து வருகின்றனர். பின்னர் தீபத்தன்று மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்திற்கு பக்தர்கள் நெய்காணிக்கை அளிக்கும் வகையில், கோவிலின் வளாகத்தில் நெய்தீப காணிக்கை செலுத்தி வருகின்றனர். தீபாவளி முதல் தொடர் விடுமுறை காரணமாக அருணாச்சலேஷ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)