திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் நந்தி பகவானுக்கு சனி பிரதோஷம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் ஆவணி மாத சனி பிரதோஷம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பெரிய நந்தி பகவானுக்கு சனி பிரதோஷம்
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்க கூடிய அண்ணாமலையார் கோவிலில் இன்று பிரதோஷம் பக்தர்கள் வெள்ளத்தில் எளிமையாக நடைபெற்றது. இந்த நந்திக்கு மாதத்தில் இரண்டு முறை அபிஷேகங்கள் நடைபெறும் அமாவாசை ,பௌர்ணமி என வரும் இரண்டு நாட்கள் முன்பாக நடைபெறும்.
கருவறையில் எதிரே உள்ள பரணி தீப மண்டபத்தில் உள்ள பிரதோஷ நந்திக்கும், சரவிளக்கு நந்தி, அதிகார நந்தி, கொடிமரம் நந்தி, கிளி கோபுரம் நந்தி மற்றும் மலை பார்க்கும் நந்தி என்று அழைக்கப்படுகின்ற பெரிய நந்திக்கும் இன்று மாலை அபிஷேக பொடி, பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், விபூதி உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. அப்போது அபிஷேகம் நடைபெறும் போது சிவாச்சாரியார்கள் பக்தர்கள் வெள்ளத்தில் பாடல்கள் பாடினார். அப்போது பக்தர்கள் மெய்மறந்தனர்.
மேலும் வண்ண வண்ண மலர்களால் நத்தி பகவானுக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் சனி பிரதோஷம் என்பதால் இன்று 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என மந்திரத்தை முழுங்கி நந்தி பகவானை தரிசனம் செய்தனர்.இதில் காவல்துறையினர் 50-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நந்தி பகவானின் சிறப்பு:
சிவன் கோவில்களில் சிவபெருமானுக்கு எதிரே நந்தி பகவானின் பெரிய திருவுருவம் கம்பீரமாக உள்ளது. பிரதோஷ காலங்களில் வழிபடும் பக்தர்கள் நந்தியை வழிபட்டு விரதமிருந்து மாலை பூஜை முடித்த பின் உணவு அருந்துகின்றனர்.
தியோத திதியில் மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் ஆகும். சிவபெருமான் நஞ்சுண்டு உலகத்தை காத்த அந்த நேரத்தை பிரதோஷ காலம் என கூறுகிறோம். அக்காலத்தில் நந்தி பகவானையும், சிவபெருமானையும் தரிசனம் செய்தால் சர்வ பாவமும் விலகும் என்றும், மகப்பேறு உண்டாகும் என்றும் நம்பப்படுகிறது.
நந்தியிடம் வேண்டிக்கொண்டால் ஈசனிடம் கூறி வாழ்க்கையை ஆனந்தம் ஆக்குவார்
சிவாலயங்களில் கருவறை ஈசனை எந்த அளவுக்கு வழிபடுகிறோமோ அதே அளவுக்கு நந்தியையும் வழிபட வேண்டும். நந்தி என்றால் ஆனந்தத்தை தருபவர் . நந்தியிடம் நாம் என்ன கோரிக்கை வைத்தாலும் அதை அவர் ஈசனிடம் தெரிவித்து நமது வாழ்க்கையை ஆனந்த மயமாக்குவார் என்பது ஐதீகமாகும்.
பிரதோஷம் தினத்தன்று நந்திக்கு செய்யப்படும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகளைக் கண்டு வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் விலகி விடும். இத்தகைய சிறப்பு பெற்ற நந்தி திருவண்ணாமலை தலத்தில் தனித்துவமான சிறப்புகளுடன் திகழ்கிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

