மேலும் அறிய

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மூலவர் சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்ட 368வது ஆண்டுவிழா

டச்சுக்காரர்கள் சண்முகர், நடராஜர் இரு உற்சவ மூர்த்திகளையும் எடுத்து கொண்டு கடல் வழியே பயணத்தை தொடர்ந்தனர்.கடலில் திடீரென ஏற்பட்ட மாற்றம்,கடும் சூறாவளியால் கப்பல் நிலை தடுமாறியது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மூலவர் சண்முகர்  கடலில் கண்டெடுக்க பட்ட 367வது ஆண்டுவிழா- உற்சவர் அலைவாயுகந்த பெருமான் சிறப்பு அபிஷேக தீபாரதனையுடன் திருவீதி உலா.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மூலவர் சண்முகர்  கடலில் கண்டெடுக்கப்பட்ட 368வது ஆண்டுவிழா

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் இரண்டாம் படை வீடான அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலை 1648 ஆம் ஆண்டு டச்சுப்படையினர் கைப்பற்றினர். இதனை மன்னர் திருமலை நாயக்கர் எதிர்த்து போராடியும் வெற்றி காண இயலவில்லை.இதனை தொடர்ந்து கோவிலை கைப்பற்றிய டச்சுக்காரர்கள் சண்முகர், நடராஜர் இரு உற்சவ மூர்த்திகளையும் எடுத்து கொண்டு மீண்டும் கடல் வழியே பயணத்தை தொடர்ந்தனர்.  

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மூலவர் சண்முகர்  கடலில் கண்டெடுக்கப்பட்ட 368வது ஆண்டுவிழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மூலவர் சண்முகர்  கடலில் கண்டெடுக்கப்பட்ட 368வது ஆண்டுவிழா

கடலிலேயே உற்சவ மூர்த்தி சிலைகளை உருக்கும் முயற்சியில் ஈடுப்பட்ட போது கடலில் திடீரென ஏற்பட்ட மாற்றம்,கடும் சூறாவளியால் கப்பல் நிலை தடுமாறியது. இதனை கண்டு அஞ்சிய டச்சுக்காரர்கள் தங்களுக்குள் பேசி முடிவெடுத்து இரண்டு உற்சவ மூர்த்தி சிலைகளையும் கடலில் விட்டதும் கடலின் சீற்றமும் காற்றின் வேகமும் தணிந்தது. இதனை கண்டு வியப்புற்றனர் டச்சுக்காரர்கள். டச்சு நாட்டின் ராணுவ குறிப்பில் வரலாற்று ஆவணமாக பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மூலவர் சண்முகர்  கடலில் கண்டெடுக்கப்பட்ட 368வது ஆண்டுவிழா

இச்சம்பவம் நடைபெற்று 5 ஆண்டு கடந்த பின்னர் உற்சவ மூர்த்தியை மீண்டும் உருவாக்கும் பணி கோயிலில் துவங்கப்பட்டது. அச்சமயத்தில் வடமைலயப்பர் என்ற பக்தரின் கனவில் முருகப்பெருமான் தோன்றி உற்சவ மூர்த்தி கடலில் இருக்கும் இடத்தை காண்பித்து அடையாளமாக எலுமிச்சை பழமும், கருடப்பறவையும் தோன்றும் என அருளினார். இதனை தொடர்ந்து வடமலையப்பர் கடலில் தேடத்துவங்கினார். குறிப்பிட்ட தூரத்தில் கருடன் வட்டமிடுவதை கண்ட வடமலையப்பர் வேகமாக சென்று பார்த்தபோது எலுமிச்சை பழம் மிதந்ததை கண்டவுடன் கடலுக்குள் நீந்தி சென்று உற்சவ மூர்த்திகளை வெளியே கொண்டு வந்து திருச்செந்தூர் கோயிலில் சண்முகரையும் நடராஜரையும் மீண்டும் பிரதிஷ்டை செய்து வழிப்பட்டனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மூலவர் சண்முகர்  கடலில் கண்டெடுக்கப்பட்ட 368வது ஆண்டுவிழா

முருக பெருமானின் அறுபடை வீடுகளுள் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உலக புகழ் பெற்றது.இக்கோயிலின்  சண்முகர் கடலில் கண்டெடுக்கபட்ட நாளான தை மாதம்  29 ஆம் தேதி கருவறையில் கந்தப்பெருமான் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்ட தினம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாட பட்டு வருகின்றது.இதனையொட்டி   சண்முகர்  கடலில் கண்டெடுக்கப்பட்ட 368  வது ஆண்டான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மூலவர் சண்முகர்  கடலில் கண்டெடுக்கப்பட்ட 368வது ஆண்டுவிழா

அதனை தொடர்ந்து,  உற்சவரான அலைவாயுகந்த பெருமானுக்கு கோவில் உட்பிராகரத்திலுள்ள சஷ்டி மண்டபத்தின் முன்பு 16 வகையான பால், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யபட்டு, அலங்காரமாகி மஹா தீபாரதனையுடன் எழுந்தருளி, கோவிலுள்ள உட்பிராகரம் மற்றும் வெளிபிராகத்தை சுற்றி  திருவீதி உலா வந்து மீண்டும்  சஷ்டி மண்டபத்தை வந்தடைந்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fact Check : அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
Breaking News LIVE: யூ ட்யூபர் சவுக்கு சங்கருக்கு மே 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்
Breaking News LIVE: யூ ட்யூபர் சவுக்கு சங்கருக்கு மே 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்
TN Weather Update: கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Muttukadu Boat House : முட்டுக்காடு SUMMER SPECIAL 1 DAY PLAN-க்கு ரெடியா? இவ்வளவு OFFER இருக்கா?Suchitra interview  : ”ஐஸ்வர்யா நல்ல அம்மாவா? என் சப்போர்ட் தனுஷூக்கு தான்” பகீர் கிளப்பிய சுச்சிGV Prakash Saindhavi Divorce : ”ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்”  எமோஷனலான GV, சைந்தவிVenkatesh Bhat : SUN TV vs VIJAY TV வெங்கடேஷ் பட் பதிலடி போட்டியில் முந்துவது யார்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fact Check : அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
Breaking News LIVE: யூ ட்யூபர் சவுக்கு சங்கருக்கு மே 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்
Breaking News LIVE: யூ ட்யூபர் சவுக்கு சங்கருக்கு மே 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்
TN Weather Update: கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
Yellow Fever: தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
PM Modi's Nomination: நாடாளுமன்ற தேர்தல் - வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!
PM Modi's Nomination: நாடாளுமன்ற தேர்தல் - வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!
11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
Cow Theft:
"பீப் கடைக்கு " மாடுகளை திருடிய பார்ட் டைம் திருடர்கள் ..! ஜெயிலுக்கு அனுப்பிய போலீஸ் ..!
Embed widget