Thiruppavai 28: உரிமையின் காரணமாகவே உரிமையில் அழைத்தோம்...கோபித்து கொள்ளாதே கண்ணா- ஆண்டாள்
Thiruppavai 28: மார்கழி மாதம் 28வது நாளான இன்று, இந்த நாளுக்கு உரிய திருப்பாவை பாடலாக ஆண்டாள் இயற்றியதை காண்போம்.
மார்கழி மாதத்தில் கண்ணபிரானை போற்றி, 30 நாட்களும் 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஆண்டாள் இயற்றியுள்ளார். இருபத்து எட்டாவது பாடல் மூலம் ஆண்டாள் கூற வருவதை காண்போம்.
திருப்பாவை இருபத்து ஏழாவது பாடல் விளக்கம்
நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர் சாதம் உண்பவர்கள். எங்களுக்கு போதிய அறிவு இல்லை. ஆனால், உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுந்தம் உறுதி என்பதை அறிந்துள்ளோம். உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க எவராலும் முடியாது. விரதம் இருக்கும் முறை பற்றி எல்லாம் அறியாத பிள்ளைகள்..குறையே இல்லாத கோவிந்தா, உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே. எங்கள் இறைவனே, எங்களது நோன்பை ஏற்று அருள் தருவாயாக என கண்ணனிடம் தெரிவிப்பது போல ஆண்டாள் பாடல் அமைத்துள்ளார்.
திருப்பாவை இருபத்து ஏழாவது பாடல்:
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்
ஆண்டாள்:
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் மிகவும் தமிழ் புலமை மிக்கவராக திகழ்ந்துள்ளார்.
பக்தி இயக்கம்:
கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். தமிழுக்கு பங்காற்றியதில், பக்தி இலக்கியங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.
மார்கழி மாதத்தில், கண்ணபிரானை வைத்து, இலக்கிய நயம் மிக்கதாகவும், உவமை- உருவகத்தை நேர்த்தியாகவும், தமிழை அழகுப்படுத்தி பாடல் அமைத்திருப்பதை காணும்போது, ஆண்டாளின் தமிழ் வளத்தை அறியலாம்.
தொடர்ந்து படிக்க: Thiruppavai 27:மார்கழி 27...கூடி அமர்ந்து பகிர்ந்தளித்து உணவு உண்ண வேண்டும்- ஆண்டாள்….