கோலாகலமாக நடந்த கூடலூர் கோவில் சித்திரை திருவிழா..பக்தர்கள் அலகு குத்தி வழிபாடு
கூடலூர் கோவில் சித்திரை திருவிழா நிகழ்ச்சியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் அழகு குத்தியும், பால்குடம் எடுத்தும், தீ மிதித்தும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
அருள்மிகு முனியாண்டி சுவாமி, ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அழகு குத்தி, பால்குடம் எடுத்து, தீ குண்டம் இறங்கி ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
சித்திரைத் திருவிழா
தேனி மாவட்டம் கூடலூர் நகரில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ முனியாண்டி சுவாமி, ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் திருக்கோவில். இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த சூழலில் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து, அழகு குத்தி, தீக்குண்டம் இறங்கும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.
நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
கூடலூர் மெயின் ரோட்டில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து அலகு குத்தி, பால்குடம் எடுத்து கூடலூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அருள்மிகு ஸ்ரீ முனியாண்டி சுவாமி ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் திருக்கோவிலுக்கு வந்தனர்.கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தி பரவசத்துடன் அழகு குத்தி, பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் அம்மன் கோஷங்கள் முழங்க தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினார். பின்னர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட பால்குடங்களை கொண்டு செல்வ முத்து மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
CM Stalin: ”உழைப்பாளிகளின் குடும்பங்கள், பொருளாதாரம் உயர்ந்திடணும்”- முதல்வர் மே தின வாழ்த்து
இந்த நிகழ்ச்சியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் அழகு குத்தியும், பால்குடம் எடுத்தும், தீ மிதித்தும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினார். இதனைத் தொடர்ந்து இன்று மாலை அக்னி சட்டி எடுத்து வருதல், இரவு கரகம் அழைத்து வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நாளை மாவிளக்கு எடுத்தல் முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்டா திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கூடலூர், கம்பம், லோயர் கேம்ப், சுருளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து சென்றனர். இத்திரு விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் கோவில் வளாகத்தில் வழங்கப்பட்டது