மேலும் அறிய

தஞ்சை பெரியகோயிலில் மகா வராஹி அம்மனுக்கு வரும் 5ம் தேதி முதல் ஆஷாட நவராத்திரி விழா தொடக்கம்

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் அமைந்துள்ள வராஹி அம்மனுக்கு வரும் 5ம் தேதி ஆஷாட நவராத்திரி விழா தொடங்குகிறது.

தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் அமைந்துள்ள வராஹி அம்மனுக்கு வரும் 5ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை ஆஷாட நவராத்திரி விழா நடக்கிறது.

சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் பெரிய கோயில்

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோயில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடக் கலைக்கும், சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோயிலை காண தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோயில், பிரஹதீஸ்வரர் ஆலயம் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலின் தலைமைச் சிற்பியாக குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன் என்ற பெயர் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது.

தஞ்சை பெரியகோயிலில் மகா வராஹி அம்மனுக்கு வரும் 5ம் தேதி முதல் ஆஷாட நவராத்திரி விழா தொடக்கம்

பெரிய கோயிலில் உள்ள மகா வராஹி அம்மன் சன்னதி

இத்தகைய உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மகா வராஹி அம்மன் சன்னதி உள்ளது. பிரசித்தி பெற்ற வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழா நாட்களில் வராஹி அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் செய்யப்படும்.

ஆஷாட நவராத்திரி விழா தொடக்கம்

அதன்படி 22-ம் ஆண்டு  ஆஷாட நவராத்திரி விழா வரும் 5ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான 5ம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது.  முதல் நாளில், வராஹி அம்மனுக்கு இனிப்புகளால் அலங்காரம் செய்யப்படுகிறது. 2ம் நாளான 6ம் தேதி வராஹி அம்மனுக்கு  மஞ்சள் அலங்காரம்,  7ம் தேதி குங்குமம், 8ம் தேதி சந்தனம், 9ம் தேதி தேங்காய்ப்பூ, 10ம் தேதி மாதுளை, 11ம் தேதி நவதானியம், 12ம் தேதி வெண்ணெய், 13ம் தேதி கனிவகை அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது. 

விழா நாட்களில் நாள்தோறும் காலை 8 மணி முதல் 10 மணி வரை சிறப்பு வாராஹி ஹோமும், 10 மணி  முதல் 11 மணி வரை சிறப்பு அபிஷேக, தீபாராதனையும், மாலை 6 மணி முதல் சிறப்பு அலங்காரமும், இரவில் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 

பஞ்சமி தினமான 10ம் தேதி (புதன்கிழமை) காலை பஞ்சமி அபிஷேகம், மதியம் 12 மணிக்கு பஞ்சமி குழுவினரால் 1000 பேருக்கு மேல் சிறப்பு நைவேத்ய பிரசாதம் வழங்கப்படும்.

15ம் தேதி மாலை 5 மணிக்கு நாதஸ்வரம், கரகாட்டம், ஒயலாட்டம், ஜெண்டை வாத்தியம், வாணவேடிக்கையுடன் அம்மன் திருவீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அரண்மனை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கண்காணிப்பாளர்கள் மாதவன், மணிகண்டன் மற்றும் ஆஷாட நவராத்திரி விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
"பக்திமானா இருப்பார் போல" பெட்ரோல் பங்கில் சாமியை கும்பிட்டுவிட்டு ஆட்டைய போட்ட திருடர்!
"அவங்களுக்கு தகுதி இருக்கு" மம்தா தலைமையில் இந்தியா கூட்டணி? பயங்கர வியூகமா இருக்கே!
Vijay - Seeman:
Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
Embed widget